செய்திகள்
இன்றைய நாள் (14.05.2019)
உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர்மனம் வலிக்கும்போது சிரிக்க வை..!: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.05.2019 )…!
14.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
சுக்கிலப்பட்ச தசமித்திதி பகல் 12.02 வரை. அதன்மேல் ஏகாதசித் திதி பூரம் நட்சத்திரம் காலை 07.59 வரை. பின்னர் உத்திரம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி சித்தாமிர்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் சதயம் சுபநேரங்கள் காலை 07.30 – 08.30 மாலை 04.30 –- 05.30 ராகுகாலம் 3.00–- 04.30 வரை எமகண்டம் 09.00–10.30 குளிகைக்காலம் 12.00–01.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால)
மேடம் :நலம், ஆரோக்கியம்
மேடம் :நலம், ஆரோக்கியம்
இடபம் :மகிழ்ச்சி, சந்தோஷம்
மிதுனம் :நட்பு, உதவி
கடகம் :விவேகம், வெற்றி
சிம்மம் :அன்பு, இரக்கம்
கன்னி :சுகம், இன்பம்
துலாம் :பொறுமை, அமைதி
விருச்சிகம் :அன்பு, ஆதரவு
தனுசு :லாபம், லக் ஷ்மீகரம்
மகரம் :உயர்வு, மேன்மை
கும்பம் :அமைதி, தெளிவு
மீனம் :காரியசித்தி, அனுகூலம்
”சைவ சித்தாந்தம்” இடது பாகம் உமையம்மையை உடைய சிவவடிவம் அர்த்தநாரீஸ்வரர் எனப்பெறுவது போலத் திருமாலை இடது பங்கில் உடைய சிவ வடிவம் அரியத்தார் எனவும் “சங்கரநாராயணர்” எனவும் பெரும் சிவனும் விஷ்னுவும் இணைந்த வடிவழகின் மாண்பினை அகநாநூரு வெருவரு கருந்திறல் இருபெருந்தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல” எனவும் காரைக்கால் அம்மையார் செங்கன் மாலை பங்குடையான் (4.52) எனவும் “ஒருபால் உலகளந்த மாதவனாய் (4.41)” குறித்து சிவனையும் நாராயணனையும் போற்றிப் பாடியுள்ளார்.)
(நீ இன்று சொல்கின்ற பொய்கள், நாளையும் உன்னைப் பொய் சொல்ல வைக்கும்.)
புதன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் – 1-5
பொருந்தா எண்கள் – 8 – 6
அதிஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர் நீலம்
இராமரத்தினம் ஜோதி