செய்திகள்

ஊனம் வாழ்வின் முடிவல்ல

உடலின் ஊனங்களை – உன்
 உதட்டுப் புன்னகையில் மறைத்து விடு
 மனதின் வலிமையினால்
 மகத்தான வெற்றியினை மலரவிடு
 உறுப்புக்கள் பல இருந்தென்ன
 கறுப்பு மனதுடன் கயவர்களாய் பலர்
 பொறுப்புகளை மனதில் வளர்த்திடு
 ஊனம் உன் வாழ்வில் ஒரு குறுக்கல்ல.
 வலிகள் பல தாங்கி 
 வாழ்க்கையின் தடைதாண்டி
 வாழ்ந்து பார் பூமியிலே
 வசந்தம் உன் வாசல் தேடி வரும்.
 வேதனைகளை வேர்களைந்து
 சாதனைகளை சரித்திரமாக்கு
 பாதைகள் பல இருக்கும் வாழ்விலே
 பயணிக்கட்டும் உன் வெற்றிகள் உறுதியுடன்.
 ஊனம் வாழ்வின் முடிவல்ல
 வானம் தான்டி சென்றிடு
 வாழ்க்கை கதையை வென்றிடு.

ஊனம் வாழ்வின் முடிவல்ல 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button