செய்திகள்

என் வாழ்வு

 துயரத்தின் சுவடுகள்
 வரைந்து விட்ட
 பாதை வழி
 என் கால்கள்
 பயணிக்கின்றன.
 முட்கள் மட்டுமே 
 விதைக்கப்பட்ட வழியில்
 என் பாதங்கள் 
 கண்ணீர் சிந்துகின்றன.
 துயரங்கள்
 தூறல்களாக
 என் கண்வழியே
 வழிகிறது.
 வார்த்தைகளால்
 வர்ணிக்க முடியாத – என்
 சோகங்கள்
 வடிகின்றன
 கவிவரியாய்….
என் வாழ்வு 1

Back to top button