செய்திகள்

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்.படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionஇலங்கையின் பல இடங்களில் அமைதி குலைவதாக செய்திகள் வெளியானதை அடுத்து நாடு தழுவிய ஊரடங்கு. (கோப்பு படம்)

இலங்கையில் பல பகுதிகளில் அமைதி குலைவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பித்துள்ளது இலங்கை போலீஸ்.
இது தொடர்பாக பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸம் அமீன் பதிவிட்டுள்ள ட்வீட்:
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்தே, இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.
சிலாபம், குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் இன்றும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதை அடுத்து, இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை

வடமேல் மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்குமாறு பொலிஸார் அறிவித்தனர்.
இதன்படி, கொழும்பின் பல பகுதிகளிலும் பொலிஸார் வீதிகளில் இறங்கி, அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவித்தனர்.
அத்துடன், வீதியிலுள்ள மக்களை விரைவில் தமது வீடுகளை நோக்கி செல்லுமாறும் பொலிஸார் அறிவித்து வருவதைப் பார்க்கமுடிகிறது.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது சன நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது.
அத்துடன், அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.

Back to top button