செய்திகள்

கிரக தோஷம் நீங்க குருபகவான் வழிபாடு

குரு பகவானை எப்படி வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

ஒருவரின் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான்.
குருப் பெயர்ச்சி என்பது நவகிரகங்களில் ஒருவரான குருபகவானின் சஞ்சாரத்தை ஒட்டி நிகழ்வது. அந்தப் பெயர்ச்சி காலத்தில் இவருக்கு வழிபாடு செய்து பலன் பெறுவது பக்தர்களின் வழக்கம்.
மேலும் அவரவர் ஜாதக அமைப்புப்படி இந்த குருப் பெயர்ச்சி அளிக்கப்போகும் நன்மைகளைப் பொறுத்து அவரவர் உரிய பரிகாரம் செய்து கொள்வதும் வழக்கம்.
குருபகவனை வழிபடும் முறை

 • வீட்டின் அருகில் இருக்கும் ஆலயத்தில் நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம்.
 • குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை உரிய ரத்தினம் புஷ்பராகம்.  • துயரங்கள் குறைய குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் குரு பகவானின் பரிபூரண அருளாசியும் நன்மைகளும் தேடி வரும், துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம்.
  • குரு பகவானின் அருள் கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.
  • குருவிற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமையாகும், அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம்.
  • குருவுக்கு உரிய தினங்களில், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும்.
  • அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.


  கிரக தோஷம் நீங்க குருபகவான் வழிபாடு 1

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  Back to top button