செய்திகள்

வெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்

நாட்டின் எந்த பகுதிலாவது வெட்டுகிளிகளின் தாக்கம் காணப்பட்டால் 1920 என்ற விசேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு விவசாயதினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யு.எம்.டப்ள்யு.வீரக்கோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குருணாகல் மாவத்தகம பகுதியில் காணப்பட்ட வெட்டுகிளிகளின் தாக்கம் வடக்கு,தெற்கு மாகாணங்களிலும் அவதானிக்க பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் இரத்தினபுரி , கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் பரவியிருப்பதாகவும் தெரிவித்தார்.

வெட்டுக்கிளிகள் தற்போது இறப்பர், தென்னை, சோளம், கோப்பி போன்ற பயிர்களையும் அழித்துவருகின்றன.

இந்த வெட்டுக்கிளிகள் குறித்து விவசாய ஆராச்சி நிலையம் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வெகு விரைவில் இவற்றை அழிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Back to top button