செய்திகள்

அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்த ஆஸ்திரேலியா நிபந்தனையுடன் இணக்கம்?

ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு 150 நவுறு மற்றும் மனுஸிலுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என்ற நியூசிலாந்து அரசின் சலுகையை ஆஸ்திரேலிய பிரதமர் நிபந்தனை ஒன்றின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்து நாட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விசா கட்டுப்பாடின்றி வந்துபோக முடியும் என்ற நிலையை மாற்றி, அகதிகளாக அங்கு குடியமர்த்தப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி சட்டமாற்றம்  கொண்டுவரப்பட்டால் நியூசிலாந்தின் சலுகையை நடைமுறைப்படுத்த பிரதமர் Scott Morrison தயார் என குறிப்பிடப்படுகிறது.
மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்தப்படும் அகதிகள் சுற்றுலா விசா, வர்த்தக விசா உட்பட எந்தவழியிலும் ஆஸ்திரேலியாவுக்குள் பயணம் மேற்கொள்ளாதவாறு தடைசெய்வதற்கான சட்டமுன்வடிவு, நாடாளுமன்ற விவாதத்திற்காக கடந்த நவம்பர் 2016 முதல் காத்திருக்கும் பின்னணியில், குறித்த சட்டமுன்வடிவுக்கு லேபர், கிரீன்ஸ் மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவு வழங்கவில்லை என பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாடாளுமன்றில் இச்சட்டமுன்வடிவு மீதான வாக்கெடுப்பை இவ்வாரம் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் பிரதமர் ஆராய்ந்துவருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. 
வருடமொன்றுக்கு 150 பேர் என்ற வகையில் நவுறு மற்றும் மனுஸிலுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்த நிலையில், இச்சலுகை இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், ஆஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, பல தடவை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thank you – sbs.com.au
அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்த ஆஸ்திரேலியா நிபந்தனையுடன் இணக்கம்? 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button