செய்திகள்

சிட்னியில் அகதி குடும்பங்களுக்கு மகிழ்சியான செய்தி

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பங்களுக்கான இலவச child care-சிறுவர் பராமரிப்பு சேவையை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை சிட்னி Canterbury-Bankstown Council மேற்கொண்டுள்ளது.
அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் செறிந்து வாழும் சிட்னி Canterbury-Bankstown Council, அங்குள்ள Asylum Seekers Centre மற்றும் Sydney Alliance ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து சுமார் ஒருவருட காலத்திற்கு பரீட்சார்த்த முயற்சியாக இந்த இலவச சிறுவர் பராமரிப்பு சேவையை வழங்கவுள்ளது.

இதன்படி Punchbowl Children’s Centre, Carrington Occasional Care மற்றும் Lakemba Children’s Centre ஆகிய சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் ஊடாக இவ் இலவச சேவை வழங்கப்படவுள்ளது.

குறித்த திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இச்சேவையினை நிரந்தரமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என Canterbury-Bankstown மேயர் Khal Asfour தெரிவித்தார்.

Sydney Alliance அமைப்பு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் இந்த இலவச சிறுவர் பராமரிப்பு சேவைக்கு தகுதிபெறும்குடும்பங்கள் தெரிவுசெய்யப்படவுள்ளன.

இந்த இலவச சிறுவர் பராமரிப்பு சேவை ஆரம்பிக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர் குடும்பங்களின் அகதி தஞ்ச கோரிக்கை அங்கீகரிக்கப்படும்வரை சிறுவர் பராமரிப்புக்கான அரச மானியத்தை அவர்கள் பெறமுடியாதென்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் அகதி குடும்பங்களுக்கு மகிழ்சியான செய்தி 1

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button