செய்திகள்

நேர்கொண்ட பார்வை: போஸ் கொடுத்த கழுகுப் படத்தால் புகழ் பெற்ற கனடா புகைப்படக்கலைஞர்

நேர்கொண்ட பார்வை: கனடா புகைப்பட கலைஞர் ஒரே புகைப்படத்தில் 'ஓஹோ' புகழ் பெற்றார்படத்தின் காப்புரிமைSTEVE BIRO

தொழில்முறை சாராத கனடா புகைப்பட கலைஞர் எடுத்த பருந்து புகைப்படம் சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்துள்ளது. இதன் காரணமாக தாம் நெகிழ்ந்து போய் உள்ளதாக கூறுகிறார் அந்த புகைப்பட கலைஞர்.

என்ன புகைப்படம்?

கனடாவை சேர்ந்த ஸ்டீவ் பைரொ கனடியன் ராப்டர் சரணாலயத்தில் ஒரு பருந்தின் புகைப்படத்தை எடுத்தார். அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். முதலில் சாதரணமாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த புகைப்படம், பின் வைரலாக பரவியது.
அன்று அங்கு ஸ்டீவ் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்திருந்தார். அதில் ஒன்றுதான் இந்த புகைப்படம்.
நேர்கொண்ட பார்வையுடன், இரண்டு இறக்கையும் தண்ணீரில் பட அந்த புகைப்படத்தில் கழுகு பறக்கிறது.
ரெட்டிட்டில் முன் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.

விளையாட்டு புகழானது

விளையாட்டு வினையாகும். இங்கு இவருக்கு விளையாட்டு புகழாக மாறி இருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொழுதுபோக்காகதான் புகைப்படங்களை எடுக்க தொடங்கினார் ஸ்டீவ்.
இயற்கை சார்ந்த புகைப்படங்கள், நகரங்களின் புகைப்படங்கள் என எடுக்க தொடங்கி இருக்கிறார்.
பறவைகளை புகைப்படம் எடுப்பதில் தமக்கு அலாதி பிரியம் இருப்பதாக கூறுகிறார் அவர்.
பறவைகள் என்னை அடிமையாக்குகின்றன. ஏதோவொன்று பறவைகளிடம் உள்ளது. அவை இரைபிடிக்கும் பாங்கு, குழைந்தைகள் போல விளையாடும் அதன் தன்மை ஆகியவை என்னை ஈர்க்க செய்கின்றன என்கிறார்.
ஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில் இந்த உலகத்தை காண புகைப்படக் கலை தூண்டுவதாக ஸ்டீவ் கூறுகிறார்.

Back to top button