Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

இன்றைய நாள் (04-11-2018)

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

“செயலை விதை­யுங்கள். பழக்கம் உரு­வாகும். பழக்­கத்தை விதை­யுங்கள். குணம் உரு­வாகும். குணத்தை விதை­யுங்கள். எதிர்­காலம் உரு­வாகும்…!” : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.

04-11-2018 விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

மேஷம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
ரிஷபம்: இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோ னையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்பு நிங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

கடகம்: உற்சாகமான நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்: அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கன்னி: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.
துலாம்: புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கு வது நல்லது. தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத் தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிகம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
தனுசு: அனுகூலமான நாள். ஆனால்,புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். வியாபா ரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மகரம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
கும்பம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.


05-11-2018 விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் நாள் திங்கள்கிழமை இராசிபலன் பார்க்க..

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: