செய்திகள்

இலங்கையிலும் ஒருவருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட  உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் ஒருவருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள நபருக்கு  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ்  பிரித்தானியாவில் முதல் முதலாக உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button