செய்திகள்

இன்றைய நாள் (20-11-2018)

“அதிகாரம் செய்வதற்கு முன் அடங்கக் கற்றுக் கொள்ளுங்கள்….!” : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.

20-11-2018 விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

நாள் செவ்வாய்க்கிழமை
திதி துவாதசி பகல் 1.30 வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் ரேவதி மாலை 6.10 வரை பிறகு அசுவினி
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை
நல்லநேரம் காலை 10.45 முதல் 11.45 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம் பூரம் மாலை 6.10 வரை பிறகு உத்திரம்
சூலம் வடக்கு



மேஷம்
: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். சிலருக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் சந்தர்ப்பம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை வீட்டில் சிறுசிறு சலசலப்புகளை ஏற்படுத்தும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டுக்குள் காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.

ரிஷபம்: நீண்டநாளாக எதிர்பார்த்த பணம் இன்று கைக்கு வரும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக் கிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை அனுசரணையாக இருப்பார்கள். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் பயனுள்ளதாக இருக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு முக்கியப் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். குடும்பம் தொடர்பான முடிவு எதையும் எடுக்கவேண்டாம். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுபச் செலவுகளால் கையிருப்பு கரையும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சிம்மம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கன்னி: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூரில் இருந்து சுபச் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலையில் சிலருக்கு மனதில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

துலாம்: பல வகைகளிலும் அனுகூலமான நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. மற்றவர்களுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். உங்கள் தேவைக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவி செய்வார்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட மறைமுக விமர்சனம் நீங்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும் வாய்ப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்: புதிய முயற்சியே தவிர்க்கவும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், எதிர்பாராத பணவரவின் மூலம் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

தனுசு: எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக் காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரியம் அனுகூலமாகும்.

மகரம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு முடியும். மற்றவர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நிதானம் தேவை. இளைய சகோதரர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்தும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புது முயற்சி மற்றும் பயணம் தவிர்ப்பது நல்லது.

மீனம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பணவசதிக்குக் குறைவில்லை. சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் பிரசித்தி பெற்ற தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். பழைய கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் உதவி உற்சாகப்படுத்தும். வியாபாரத்தில் பணியாளர்கள் விற்பனையை அதிகரிக்கப் பாடுபடுவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.

இன்றைய நாள் (20-11-2018) 1

Back to top button