ஏனையவை

கண்ணீர் விட்டு அழுத சாண்டி! பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி…. கடும் சோகத்தில் ரசிகர்கள்.

நாளுக்கு நாள் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தையை நினைத்து சாண்டி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்த காட்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக வில்லை. எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சியியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி நீக்கப்பட்ட காட்சியில் இதனை வெளியிட்டுள்ளது.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் சாண்டி குழந்தை மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார் என்றும் ஒரு தந்தையின் மனநிலை இது தான் எனவும் கூறி வருகின்றனர்.

இதேவேளை, சாண்டி இதற்கு முன்னர் குழந்தையின் பெயரை பிக் பாஸ் வீட்டில் எழுதி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி விட்டனர். அது மாத்திரம் இல்லை, பாசக்கார சாண்டியின் மீது ரசிகர்களுக்கு அன்பு அதிகரித்து விட்டது.

Back to top button