Be where the world is going

கவினுக்கு இவ்வளவு வாக்குகள் எப்படி கிடைக்கின்றது? தீயாய் பரவும் சர்ச்சை தகவல்

0 1,289

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் பட்சத்தில் வெற்றி பெறுவது யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.

தற்போது கவின் தொடர்ந்து நாமினேட் ஆகிக்கொண்டு வந்தும் மக்களால் அனைத்து வாரங்களிலும் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் அவர் காப்பாற்றப்படுவாரா? அவருக்கு வாக்குகள் எவ்வாறு வருகின்றது என்ற தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

பிரபல நடன இயக்குனரான ஜெப்ரி கவினுக்கு Vote Bank மூலமாக வாக்குகள் விழுகின்றன என்ற புதிய சர்ச்சையான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

இவர் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவினுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தும் எவ்வாறு வாக்குகள் விழுகின்றது என்ற கேள்விக்கு அவர் கூறிய பதிலே இந்த Vote Bank என்பதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் வாக்குகள் கூகுள் மூலம் போடப்பட்ட நிலையில் இந்த முறை Hotstar-ல் மட்டுமே வாக்களிக்க முடிகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாட்ஸ்டாரில் 51 ஓட்டுகள் அளிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் முதலில் வாக்கு வங்கி என்று அவர் பின்பு, இவ்வாறு 51 வாக்குகளால் சேனல் காப்பாற்றுகிறதா? அல்லது மக்கள் காப்பாற்றுகின்றார்களா? என்ற கேள்வினை கடைசியில் அவரே வைத்துள்ளார்.

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More