ஏனையவை

பிக்பாஸிலிருந்து வெளியேறிய தர்ஷன்… உறுதிப்படுத்திய அதிர்ச்சிப் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது இறுதிவாரம் என்பதால் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் முகேன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார்.

தற்போது கவின் 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறினார். மீதம் இருக்கும் தர்ஷன், ஷெரின், சாண்டி, லொஸ்லியாவில் இன்று யார் வெளியேறுவார் என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே வந்தது.

இந்நிலையில் இரண்டாவது ப்ரொமோ காட்சியில் நாமினேஷனில் இருக்கும் 3 பேரில் யார் காப்பாற்றப்படுகிறீர்கள் என்று கமல் கேள்வி எழுப்பினர். அப்பொழுது லொஸ்லியா காப்பாற்றப்பட்டது தெரிந்தது.

பின்பு இந்த வாரம் எலிமனேஷனில்ஷெரின் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேறியது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரத்தில் ஷெரின், தர்ஷன் இருவருக்குள்ளும் வாக்கு வித்தியாசம் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் #Redlightvijaytv என்ற என்ற அஷ் டேக்கை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் டேக் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தர்ஷனின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. இதன் மூலம் தர்ஷன் வெளியேறியுள்ளது உறுதியாகியுள்ளது.

பிக்பாஸிலிருந்து வெளியேறிய தர்ஷன்... உறுதிப்படுத்திய அதிர்ச்சிப் புகைப்படம்! 1

Back to top button