செய்திகள்

இந்த வீதி விதிமுறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நம்மை அறியாமலே நாம் பல வீதி விமுறைகளை மீறக்கூடும். அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
1.உங்கள் கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டபடி மிகவும் சத்தமாக பாடலைக் கேட்டபடி சென்றீர்களானால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். 
2.கார்களின் ஹோர்ன்களை தேவையற்ற காரணத்திற்கு பயன்படுத்தல். உதாரணமாக விடைபெறுவதற்காக(goodbye horn) பயன்படுத்தல்
3.Speed camera தொடர்பில் உங்களுக்கு முன்னால் வருகின்ற வாகன ஓட்டியை எச்சரிப்பதற்காக உங்கள் காரின் விளக்குகளை ஒளிரவைத்து சமிக்ஞை கொடுத்தல் 
4.அதிவேகமாக மட்டுமல்ல ஆகக்குறைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்வதும் தவறாகும். அநாவசியமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் மிகக்குறைந்த வேகத்தில் சென்று ஏனைய வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். 
5.கார் ஓட்டியபடி சாப்பிடுதல், குடித்தல், மேக்கப் சரிபார்த்தல் போன்ற கவனத்தை சிதறடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல்
இந்த வீதி விதிமுறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button