செய்திகள்

கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி திட்டம்

கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்கள், திணைக்கள தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான உடனேயே பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நடைமுறையை தயாரித்தல்

வெற்றிடங்கள் நிலவும் நிறுவனங்கள் குறித்து ஆராய்ந்து வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து நியமனம் வழங்குதல்

நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் பொருந்தும் தொழிற்படையை உருவாக்குதல் மற்றும் அதற்கு ஏற்ற பாட விதானங்களைத் தயாரித்தல்

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது தமது முக்கிய கொள்கை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாரிய நிலப்பரப்புகளில் அமைக்கப்பட்டு பயன்பாடின்றிக் காணப்படும் கட்டடங்களை புனரமைத்து இதற்காக பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Back to top button