செய்திகள்

சூப்பர் பிங்க் மூன்: எங்கு, எப்படி, எப்போது காணலாம்?

உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருக்கிறீர்கள், அங்குள்ள வானிலை என்ன என்பதை பொறுத்தே ‘சூப்பர் பிங்க் மூன்” என்று அழைக்கப்படும் இந்தப் பெருநிலவை காண்பது சாத்தியமா என்று கூறமுடியும்.

ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி தோன்றக்கூடிய 2020ம் ஆண்டின் மிகவும் பெரிய மற்றும் ஒளி மிகுந்த நிலவு, ”சூப்பர் பிங்க் மூன்” என்று அழைக்கப்படும். இந்த நாளன்று நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்காது. நிலவு இவ்வாறு தெரிவதற்கு ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது?

இந்த இளஞ்சிவப்பு நிலவின் சிறப்பு என்ன?

ஏப்ரல் மாதத்தின் முழு நிலவு வானத்தில் மிகவும் பெரியதாக காட்சியளிக்கும்.

இந்த வகையான சூப்பர் மூன் எனப்படும் பெரிய நிலவு, பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் சரியான வட்டத்தில் பூமியை சுற்றி வருவதில்லை. மாறாக பூமிக்கு சற்று அருகிலோ அல்லது தொலைவிலோ சுற்றி வரும்.

நிலவு பூமிக்கு சற்று அருகில் சுற்றி வரும்போது ’பெரிஜீ ’ (perigee) என்று அழைக்கப்படும். இவ்வாறு பூமிக்கு அருகில் சுற்றிவரும் நிலவு முழு நிலவாக இருந்தால் பெருநிலவு (சூப்பர் மூன்) என்று அழைக்கப்படும்.

பொதுவாக பூமியிடம் இருந்து நிலவு 384,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில்தான் சுற்றி வரும். ஆனால் பெருநிலவு பெரிஜீ தோன்றும் நாளன்று 3,57,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே பூமியை சுற்றி வரும்.

‘சூப்பர் பிங்க் மூன்” பிங்க் நிறத்தில் தோன்றுமா ?

அமெரிக்க பூர்வகுடியினர் உட்பட உலகத்தில் உள்ள பல மக்கள், காலத்தை கணித்து அதன் அடிப்படையிலேயே நிலவுக்கு பெயர் வைத்தனர்.

கனடா மற்றும் அமெரிக்க முழுவதும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இளஞ்சிவப்பு நிறமுள்ள வைல்டு கிரவுண்ட் ஃபிலோக்ஸ் பூக்கள் பூக்கும். எனவே இந்த பூக்கள் பூக்கும் காலத்தில் இந்த முழு நிலவு தோன்றுவதால் ஊர் முழுக்க காட்சியளிக்கும் இளஞ்சிவப்பு நிறத்தையே இந்த நிலவுக்கு பெயராக வைத்துள்ளனர்.

எனவே தான் ”சூப்பர் பிங்க் மூன்” என்ற பெயரை இந்த ஏப்ரல் மாத முழு நிலவு கொண்டுள்ளது.

Pigeons fly just above the Huntington Beach Pier as the super snow moon sets early on 19 February 2019 in Californiaபடத்தின் காப்புரிமை GETTY IMAGES
2019 பிப்ரவரியில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காணப்பட்ட ‘சூப்பர் ஸ்னோ மூன்.’

இன்னும் சில நாடுகளில் ஃபுல் நிலவு, முட்டை நிலவு, மீன் நிலவு என்றும் இந்த சூப்பர் பிங்க் மூன் அழைக்கப்படுகிறது.

இந்த நிலவை எப்படி காண முடியும்?

நீங்கள் இந்த நிலவை எப்போது காண முடியும் என்பது நீங்கள் இருக்கும் ஊரைப் பொறுத்தே விளக்கம் அளிக்க முடியும். எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா உள்ளிட்ட இடங்களில் இருப்பவர்கள் ஏப்ரல் 8ம் தேதி புதன்கிழமை அன்றே இந்த நிலவை காணமுடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஆஃப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்கள் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7ம் தேதி மாலை முதலே இந்த சூப்பர் மூன்னை காணமுடியும் என்று கூறுகின்றனர்.

ஆனால் உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும் இந்த நிலவை நன்கு காண முடியும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். உங்கள் ஊரில் நிலா உதிக்கும் நேரம் மற்றும் மறையும் நேரம், எந்த திசையில் மறையும் உள்ளிட்ட தகவல்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக இந்த வகை நிலவை, விஞ்ஞாணிகள் வெளியே சென்று காணும்படி அறிவுறுத்துவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

A super moon as seen from Suresnes in Paris, France on 20 February 2019படத்தின் காப்புரிமை GETTY IMAGES
இதுவும் 2019 பிப்ரவரியில் காணப்பட்ட ‘சூப்பர் மூன்.’ பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எடுக்கப்பட்ட படம் இது.

எனவே வீட்டின் மேல்தளத்தில் நீன்றபடியே இந்த நிலவை காண முடியும். உங்கள் வீட்டிற்கு அருகில் கட்டடங்கள் எதுவும் மறைக்காமல் இருந்தால் ஜன்னல் வழியாகவே இந்த நிலாவை காணலாம்.

ஏன் இந்த மாத நிலவு சிறப்பானது ?

இந்த நிலவின் அழகு அம்சங்களை தவிர்த்து, ஏப்ரல் மாதத்தில் தோன்றும் இந்த நிலவு உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பல பண்டிகைகளையும், விடுமுறை நாட்களையும் குறிக்கும்.

இந்த முழு நிலவை தொடர்ந்து வரும் ஞாயிற்று கிழமை ஈஸ்டர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இலையுதிர் காலத்தின் ஈக்விநியோக்ஸ் என்று அழைக்கப்படும் நாளையடுத்து ஈஸ்டர் வருகிறது. அதாவது பகல் நேரமும் இரவு நேரமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் நாள். இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி ஈஸ்டர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதே நாள் இந்தியாவில் ஹனுமான் பிறந்த நாளாக கொண்டாப்படுகிறது.

ஆங்கிலத்தில் ‘பாஸோவர்’ என்று அழைக்கப்படுகின்ற யூத பண்டிகையின் தொடக்க நாளாகவும் இந்த ”சூப்பர் பிங்க் மூன்” நிலவு தோன்றும் நாள் அனுசரிக்கப்படுகின்றது.

Back to top button