செய்திகள்

புறப்பட்ட சில நிமிடங்களில் சிதறிய விமானம்….. 157 பேரின் மரணத்திற்கு காரணம் என்ன? விமானம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்

6 மாதங்களில் இரண்டு விபத்துக்களை சந்தித்துள்ள எத்தியோப்பா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பல்வேறு கேள்விகளுக்கு ஆளாகியுள்ளது.

737 Max 8 என்ற விமானம் தரையில் இருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் Lion Air என்ற விமானம் இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர்.

இந்த இரண்டு விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு விமான விபத்துக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றாலும், இந்த இரு விமானங்களுக்குள் த்ற்செயலான ஒற்றுமைகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான போயிங் விமானம் புதிய தொழில்நுட்பத்துடன் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

போயிங் 737 மேக்ஸி விமானத்தில் வடிவமைக்கப்பட்ட தானியங்கி முறையில் இரண்டு விமானிகளும் சிக்கலை சந்தித்துள்ளனர் என கூறப்படுகிறது. விமானத்தின் anti-stalling system கீழ்நோக்கி கொண்டு சென்றதால் விமானிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Lion Air விமானமும் அமெரிக்க விமான நிறுவனத்தால் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது மிகவும் சந்தேகத்திற்குரியது “என்று அமெரிக்க போக்குவரத்துத் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியாவோ தெரிவித்துள்ளார்.

தொடரும் இந்த விமான விபத்து காரணமாக போயிங் இதனை சமாளிக்க கணினியில் ஒரு மென்பொருள் இணைப்பு வெளியிட இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

புறப்பட்ட சில நிமிடங்களில் சிதறிய விமானம்..... 157 பேரின் மரணத்திற்கு காரணம் என்ன? விமானம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள் 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button