செய்திகள்

தற்கொலை குண்டு தாக்குதலில் 45 சிறார்கள் பலி: யுனிசெப்பின் முக்கிய தீர்மானம்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

நாட்டில்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45 சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
பல சிறுவர்கள் அதிர்ச்சியூட்டும் மற்றும் அறிவின்றி மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு சாட்சியாகியுள்ளனர் என்றும் யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த குண்டு வெடிப்பில் பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க யுனிசெப் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறுவர்களுக்கு உளவியல்- சமூக ஆதரவு பிரதான தேவை என்று இனங்காணப்பட்டுள்ளது. எனவே சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான உளவியல்- சமூக முதலுதவியை யுனிசெப் வழங்கி வருதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

தற்கொலை குண்டு தாக்குதலில் 45 சிறார்கள் பலி: யுனிசெப்பின் முக்கிய தீர்மானம் 1

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button