செய்திகள்

இரட்டை குழந்தைகளை பார்த்து மகிழ்ந்த தாய்க்கு இடி போல வந்த செய்தி!

இங்கிலாந்தை சேர்ந்த நிக்கோல் டுஹானி மற்றும் நைல் லுபர்டு என்கிற தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
அதனை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைந்த நிக்கோல், தற்போது 24 மணி நேரமும் கவலையுடன் தன்னுடைய குழந்தைகளை விழிப்பாக கவனித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததும் பெரும் மகிழ்ச்சியடைந்தோம்.
இரட்டை குழந்தைகளை பார்த்து மகிழ்ந்த தாய்க்கு இடி போல வந்த செய்தி! 1
இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ஆடை எடுத்து அணிவிக்க வேண்டும். என்னுடைய நண்பர்கள் அனைவருக்கு காட்ட வேண்டும் என பல கனவுகள் கண்டேன்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரமாக நிலைக்கவில்லை. அடுத்த 44 நிமிடத்தில் என்னுடைய மகன் எலிஜாவின் கன்னத்தில் கட்டி ஒன்று வந்திருப்பதை பார்த்தோம். சாதாரண கட்டி என நினைத்தாலும், அது அடுத்த சில நாட்களில் பெரிதாக மாறியது.
இரட்டை குழந்தைகளை பார்த்து மகிழ்ந்த தாய்க்கு இடி போல வந்த செய்தி! 2
இருவருக்கும் மர்மமான முறையில் சளி பிடிக்க துவங்கியது. மற்றொரு மகன் Emre-வின் கன்னத்திலும் கட்டி வளர ஆரம்பித்ததும், எங்களுக்கு பயம் அதிகரித்தது.
பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தோல் அழற்சி அல்லது கொழுப்பு காரணமாக இருக்கலாம் என அதற்கான சிகிச்சை மேற்கொண்டோம்.
இரட்டை குழந்தைகளை பார்த்து மகிழ்ந்த தாய்க்கு இடி போல வந்த செய்தி! 3
ஆனால் அதன் பின்னரும் குழந்தைகளின் நிலை மோசமடைந்தது. ஏப்ரல் 30ம் திகதி மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இரண்டு பேருக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு மிகவும் குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது.
இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குழந்தைகளுக்கு சிகிச்சை அழிப்பது மிகவும் கடினமான ஒன்று என்றாலும் கூட அது சாத்தியமற்றது அல்ல என மருத்துவர்கள் கூறினார்கள்.
இரட்டை குழந்தைகளை பார்த்து மகிழ்ந்த தாய்க்கு இடி போல வந்த செய்தி! 4
அதன்படி தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீமோதெரபி சிகிச்சையால் கட்டிகள் சிறிதாக மறைய துவங்கியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய குழந்தைகள் சிரிப்பதை பார்க்கிறேன். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து கவனித்து வருகிறோம் எனக்கூறியுள்ளார்.

Back to top button