Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

குருபகவானின் அத்தனை ஆசிகளையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கையுடன் ஒரு விஷயத்தை தொடர்ந்தோம் என்றால் அது நமக்கு நிச்சயம் நேர்மறையான முடிவுகளையே கொடுக்கும். முதலில் ஒரு விஷயத்தை நம்புங்கள்.
அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதன்படி அன்றைய தினத்தைத் திட்டமிட்டால் நன்மைகளே உண்டாகும்.
2019 வைகாசி மாதம் 09 ஆம் வியாழன்
சூரிய உதயம் – மு.ப 05:55
சூரிய அஸ்தமனம் – பி.ப 18:19
ராகு காலம்
பகல் நேரம் 13:40 முதல் 15:12 வரை.
இரவு நேரம் 01:34 முதல் 03:01 வரை.
அதிஷ்ட திசை – வடக்கு
துரதிஷ்ட திசை – தெற்கு

மேஷ ராசி


இன்று சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். அஷ்டமஸ்தானத்தில் சனி இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.


ரிஷபம் ராசி
இன்று தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.


மிதுனம் ராசி
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும். எந்த ஒரு வேலைக்காக வும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

கடகம் ராசி
இன்று எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ பூர்வமான அறிவுதிறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும்.


சிம்மம் ராசி
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.


கன்னி ராசி
இன்று சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.

துலாம் ராசி
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.


விருச்சிகம் ராசி
இன்று குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும். கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.

தனுசு ராசி
இன்று எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வ தில் உற்சாகம் உண்டாகும்.

மகரம் ராசி
இன்று தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.


கும்பம் ராசி
இன்று குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.


மீனம் ராசி
இன்று ஊக்கத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept