செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன? – ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி

Source : – BBC Tamil

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு ஒருவரின் காணொளியை வெளியிட்டு, இவர்தான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி என்று கூறி உள்ளது. அந்த காணொளியில் அவர் இழந்த பிரதேசங்களுக்காக பலி தீர்ப்போம் என சூளுரைத்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கு பின்பிலிருந்தே அபுபக்கர் அல்-பாக்தாதியை காணவில்லை. அதாவது சிரியா மற்றும் இராக்கின் சில பிரதேசங்களை கைப்பற்றி கலிபாவை ஏற்படுத்திய பின்பிலிருந்தே அவரை காணவில்லை.
ஐ.எஸ் வசம் இறுதியாக இருந்தா பாகூஸ் நகரத்தை இழந்ததை இந்த காணொளியில் ஒப்புக் கொண்டுள்ளார்.
எப்போது இந்த காணொளி எடுக்கப்பட்டதென தெரியவில்லை. ஏப்ரலில் எடுக்கப்பட்ட காணொளி இது என்கிறது ஐ.எஸ் அமைப்பு.

ஏன் தாக்கினோம்?

பாகூஸ் நகரத்தை இழந்ததற்கு பலி தீர்க்கும் விதமாக ஈஸ்டர் அன்று இலங்கையை தாக்கினோம் என்று அல்-பாக்தாதி கூறி உள்ளார்.
இலங்கை தாக்குதலுக்கு முதன்முதலாக ஐ.எஸ் உரிமை கோரிய போது இந்த காரணத்தை கூறவில்லை என்கிறார் பிபிசியின் மின அல் லாமி.
இந்த காணொளியில் சூடான், அல்ஜீரியாவில் நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசி உள்ள அவர் சர்வாதிகாரத்தை விழ்த்த ஜிஹாத்தான் சரியான வழி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளியின் இறுதி காட்சியில் பாக்தாதியின் புகைப்படம் மெல்ல மறைந்து , இலங்கை தாக்குதல் குறித்து பேசும் ஒலி கேட்கிறது.
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுவந்த சூழ்நிலையில் இந்த காணொளியில் பாகூஸ் நகரத்தை இழந்ததற்கு பலி தீர்க்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன? - ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி 1

Back to top button