Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23… கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவை நடக்கும் அதிர்ஷ்டம்!

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு சனிபகவான் நகர்கிறார். அர்த்தாஷ்டம சனி முடிந்து புண்ணிய சனி ஆரம்பிக்கிறது.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 5 மற்றும் 6ஆம் அதிபதி. அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இனி அலைச்சல்கள் இருக்காது. இதுநாள் வரை இருந்த மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் மீதான கவலைகள் அதிகரிக்கும்.
சனிபகவானின் பார்வை மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது.
தடைகள் நீங்கும்
கன்னி ராசிக்காரர்களே… இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும்.
வெற்றி மீது வெற்றி வரும்
அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். இன்னும் சில மாதங்கள்தான் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
புத்திரர்களால் பிரச்சினை
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும்.
வீடு நிலம் வாங்குவீர்கள்
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை இவையெல்லாம் கிட்டும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது எனவே பத்திரப்படுத்துங்கள்.
அலுவலகத்தில் எச்சரிக்கை
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள்
பங்குச்சந்தை முதலீடுகள்
பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம். ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை.
மகிழ்ச்சியும் உற்சாகம்
பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும்.
பணம் பொருள் கிடைக்கும்
சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அடிக்கடி விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்க வேண்டாம் வயிறு வலி பிரச்சினைகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் கிடைக்கும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: