செய்திகள்

இன்று கொழும்பிற்கு காட்சி தந்த சிவனொளிபாதமலை…. வீடியோ…!

கொழும்பிலிருந்து சிவனொளிபாதமலையை எவரேனும் பார்த்ததுண்டா…!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் 37 ஆவது மாடியிலிலருந்து சிவனொளி பாதமலையை நேரடியாக கண்டு இரசிக்க கூடிய சந்தர்ப்பம் இன்றைய தினம் கிட்டியது.

இதற்கு ஏதோ ஒரு வகையில் கொரோனாவும் காரணமாக அமைந்துள்ளது.

வளிமண்டலத்தில் நைட்ரிஜன் 78 வீதமும் ஒட்சிசன் 20 வீதமும், காபனீர் ஒட்சைட்டு 0.03 வீதமும், சடத்துவ வாயு மற்றும் நீராவி ஆகியன காணப்படுகின்றன.

தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் Co2, குறைத்தகனத்தினால் வெளியேற்றப்படும் Co, காபன் தூள்கள் C, மற்றும் கந்தகவீரொட்சைட்டு So2 ஆகியன வளிமண்டலத்தினை தளம்பல் செய்வதுடன், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் ஈயம் உயிர் வாழ்வதறகும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.

கொரோனாவை கட்டுபடத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுவதனால் தொழிற்சாலைகளிலிருந்து, வாகனங்களிலிருந்து, விமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன பதார்த்தங்களின் அளவு குறைவடைந்துள்ளது.

ஆகையினால் வளிமண்டலமானது இன்றைய தினம் தெளிவான நிலையை அடைந்துள்ளது என கூறலாம்.

உலக வர்த்தக மையத்தின் 37 ஆவது அடுக்கில் சிவனொளிபாதமலையை இன்று தெளிவாக காணமுடிந்தது.

இந்த காட்சியை எமது சகோதர ஊடகமான ஹிரு தொலைக்காட்சி காணொளியாக மக்களுக்கு காண்பித்தது..!

நீங்களும் அந்த காணொளியை பார்த்து மகிழுங்கள்…!

Hiru

Back to top button