செய்திகள்

இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் : மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாகவே அணுக முடியும் ; சரத் வீரசேகர

கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான ஆயுதப் போரல்ல.

எனவே இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட முடியாது. அதுபோன்று இதுவொரு உள்நாட்டு ஆயுதப்போர் என்பதால் இதனை மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாக மாத்திரம் அணுக முடியுமே தவிர,மனித உரிமைச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்திற்கு விசனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்  என அவர் இதன்போது தெரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button