செய்திகள்

தமிழகத்தின் பிரசித்தி வாய்ந்த ஆலயங்களுக்கு ஆபத்து ; உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட மக்கள் கூடும் இடங்களில் வாகன சோதனை கடுமையாக இருப்பதாக அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.

இதே போல் ஆந்திரா மாநிலமான திருப்பதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஏற்கெனவே பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

அச்சுறுத்தலையொட்டி தற்போது சோதனை மேலும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி அலிபிரி சோதனை சாவடி, மலை மீது உள்ள என்.எம்.சி. சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகன செலுத்துபவர்களின் அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே வாகனங்கள் மேலே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

ஆதார் கார்ட் இல்லாத வாகன சாரதிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள்” மெட்டல் டிடெக்டர்“ கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. ரயில் நிலையம் முழுவதும் மோப்பநாய் கொண்டும் சோதனை செய்யப்படுகிறது.

இதேபோல் பஸ் நிலையத்திலும் பொலிஸார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button