செய்திகள்

லொறியொன்று கோவில் தேருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி

இவ் விபத்தின் போது முத்தையா ஜெயசங்கர் என்ற 50 வயதுடைய அப்பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

பண்டாவளைப் பகுதியில் தேயிலைத் கொழுந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கோவில் தேருடன் மோதி\ விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று அட்டாம்பிட்டிய பகுதியின் நெலுவை பெருந்தோட்டத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அத்தோடு குறித்த சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி அட்டாம்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்தின் போது முத்தையா ஜெயசங்கர் என்ற 50 வயதுடைய அப்பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

நெலுவை தோட்ட முருகன் ஆலய தேர் உற்சவம் நேற்று இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அவ் வழியே தேயிலைத் கொழுந்து மூடைகளை ஏற்றி லொறி ஒன்று  தேருடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில்  அட்டாம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் லொறிச் சாரதியைக் கைது செய்து நீதவான்  நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி குறித்த சாரதியை எதிர்வரும் 28 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button