செய்திகள்

4,500 ஆண்டுகள் பழமையானதாம் தமிழ்மொழி: அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்

தமிழ் உட்­பட 82 மொழி­களை உள்­ள­டக்­கிய திரா­விட மொழிக்­கு­டும்பம் 4,500 ஆண்­டுகள் பழமை­யான மொழி என ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது. இதில் மிகப் பழ­மை­யான மொழி தமிழ் தான் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜெர்­ம­னியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறு­வ­னமும் டேராடூன் இந்­திய வன உயர் கல்வி நிறு­வ­னமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடி­வு­களை வெளி­யிட்­டன.

அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, தெற்­கா­சிய பகுதி 600 மொழி­களின் தாய­க­மாக விளங்­கி­யுள்­ளது. அவை திரா­விடம், இந்­தோ-­–ஐ­ரோப்பா, சீனா-­–தி­பெத்­தியம் உட்­பட 6 மொழிக் குடும்­பங்­களின் கீழ் வகைப்­ப­டுத்­தப்­பட்டு ஆரா­யப்­பட்­டன. இந்த 6 மொழிக் குடும்­பங்­களில் முதன்­மை­யா­னதும் பழ­மை­யா­னதும் திரா­விட மொழிக்­ குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்­தது.

தமிழ், மலை­யாளம், தெலுங்கு, கன்­னடம் உள்­ளிட்ட சுமார் 80 மொழி­களை உள்­ள­டக்­கிய திரா­விட மொழியை 22 கோடி மக்கள் தற்­போது பேசு­கின்­றனர். இதில் பழைமை­யான மொழி தமிழ். சமஸ்­கி­ருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்­வெட்­டுக்­களும் காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button