Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

கலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

எங்களால் உள்ள செல்லவோ யாராவது உயிர் தப்பியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவோ முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகொன்றில்  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 35 அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் தென்பகுதியில் படகொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட படகில் 35 பேர் பயணித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சன்டா பாபர கவுண்டியின் தீயணைப்பு பிரிவினர் படகிலிருந்து தங்களிற்கு அபாய சமிக்ஞை கிடைத்தது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட படகில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமாகவுள்ளது சில நிமிடத்திற்கு தீ தணிகின்றது பின்னர் மூள்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகில் உள்ள எரிபொருள் காரணமாகவே இந்த நிலை ஏற்படுகின்றது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல கப்பல்கள் படகில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன ஆனால் எங்களால் உள்ள செல்லவோ யாராவது உயிர் தப்பியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவோ முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகிலிருந்தவர்கள் எவராவது நீந்தி உயிர் தப்பியிருக்கவேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை ஆனால் நாங்கள் மோசமான சம்பவத்திற்காக தயாராகிவருகின்றோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: