Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

ஆரம்பமாகும் குருபெயர்ச்சி… பேரதிர்ஷ்டத்தினை பெற்றுக்கொள்ள எந்த ராசி என்ன செய்யனும் தெரியுமா?

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

நிகழும் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12ஆம் தேதி 29 10 2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி 48 நிமிடத்தில் குருபகவான் வாக்கியப்படி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் அதனை முன்னிட்டு குருபகவான் கோவில்களில் லட்சார்ச்சணையும் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகின்றது. இந்த ஆண்டு குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. இந்த குரு பெயர்ச்சி குரு பார்வையால் பலனடையும் ராசிகளையும், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளைப் பற்றியும் கணித்துள்ளார் ஜோதிடர் குருஜி ராஜிவ் சிவம்.

இலுமினாட்டிகள் என்பவர்கள் யார்? உலக விவகாரங்களை இலுமினாட்டிகள் கட்டுப்படுத்துவதாக கூறுவது உண்மையா? அவர்களின் வரலாறுதான் என்ன?

குரு பகவான் சுப கிரகம். அவரால் நல்லது மட்டுமே செய்ய முடியும் கெடுதல் செய்ய முடியாது. ஒரு சிலருக்கு தசாபுத்தியின் படியோ அல்லது பகையான கிரகத்தை அதிபதியாக கொண்ட ராசிக்காரர்களுக்கோ சில நேரங்களில் தீயதை கொடுத்தால் கூட அது படிப்பினையாகவே இருக்கும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள்தான் பலனடையும் என்பதால் இந்த குரு பெயர்ச்சியைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்.

மேஷம் – பாக்ய ஸ்தான குரு

அதிவேகம், ஆற்றல், உடல் தெம்பு மற்றும் உற்சாகம், மேலும் மேலும் கூடும். மன தளவில் சந்தோஷம் நிறைந்து இருக்கும். இதை சரியான நேரத்தில் சரியான பாதையில் தன் வளர்சிக்காக உபயோகப்படுத்த வேண்டும். உங்களுடைய மந்தமான மன சோம்பலான அணுகுமுறையை முதலில் தூக்கி எறியுங்கள் இளைய சகோதிரம் வலுவாகும். அவர்கள் எழுத்து, பாட்டு, இயல், இசை, நாடகம் போன்ற பல வித கலைத்துறையில் ஈடுபட்டு இருந்தால் அபாரமான வளர்ச்சி உண்டு. முயற்சி செய்தால் உத்தியோகம் நல்லபடியாக அமையும், உத்யோகத்தில் இருப்பவருக்கு அசுர வளர்ச்சி உண்டு.

ரிஷபம் – அஷ்டம குரு

பணம் பல வழியில் வந்து பாக்கெட் நிரம்பும். நீங்கள் இருக்கும் குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த சுப நிகழ்ச்சிகளை இனியும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. உடல் உபாதைகளால் கஷ்ட பட்டவர்கள் முழு சுகம் அடைந்து தனக்கு வேண்டிய வண்டி, வீடு, வாகனம் என அனைத்தும் பெறுவர். அதே நேரத்தில் சுப விரையத்தையும், தேவையற்ற ஆடம்பர சிலவுகளையும் தவிர்க்கவே முடியாது.

மிதுனம் – களத்திர குரு

நல்ல உடல் மற்றும் மன உற்சாகம், புது பொலிவு, வயதில் 10 வருடம் குறைந்த இளமை துடிப்பு இருக்கும். மனம் தெளிவடைத்து தீர்கமாகும். கேட்ட இடங்களில் இருந்தும் கேக்காத இடங்களில் இருந்தும் பணம் பல வழிகளில் வந்து உதவும். ஆனால் மிதுனம் எப்போதும் சக்திக்கு மீறிய கடனை தவிர்ப்பது முக்கியம் நண்பர்கள் உதவி கை மேல் கை கொடுக்கும். சிறு தூர பிரயாணம் பலன் தரும். இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் காண்பார்.

கடகம் – ருண ரோக சத்ரு ஸ்தான குரு

குடும்பத்தில் அனைத்து குதூகலங்களும் நடைபெறும். நீண்ட நாட்களாக காத்துகொண்டிருந்த அனைத்து குடும்ப நிகழ்வுகளும் சுபவிரையம் ஏற்பட்டு நிகழும். வீட்டின் வயதில் மூத்தவர்கள், மற்றும் தாத்தா பாட்டிகளின் பரி பூரண ஆசிகள் கிடைக்கும். மூதாதயார்களின் ஆசிகளுடன், மிக நீண்ட நாளைய கோவில் பிரார்த்தனைகள் நிறைவேறும். தந்தையின் உடல் நலம் மற்றும் வளர்ச்சி சூப்பராக இருக்கும்.

சிம்மம் – பூர்வ புண்ணிய குரு

தன் உடல் நலம் மன நலம் மிகவும் சீராகி, நல்ல முடிவுகள் தனக்கு சாதகமான முடிவுகள், எதிர்கால வளத்திற்கான சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு நல்ல திருப்பம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம், மிக அதிகமான பணவரவுகள், நல்ல லாபகரமான முடிவுகள், புதிய வியாபார நிமித்தமான வரவுகள், போன்ற நிகழ்வுகளை நீங்களே நினைத்தாலும் தவிர்க்க முடியாது. வெளியூர்/வெளிநாடு பிரயாணம் வெளியூர்/வெளிநாடு வேலை வெளியூர்/வெளிநாடு வியாபாரம் நீங்கள் வணங்கும் தெய்வத்தின் அனுகூலத்தால் 100% நிறைவேறும். தெய்வம் கூடவே இருக்கும்.

கன்னி – சுக ஸ்தான குரு

அனைத்து மனச்சோர்வு, திருஷ்டி, எதிராளிகளின் பொறாமை, உடல் சோர்வு, உடல் உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் கன்னிக்கு தொழில் மேன்மை அடையும். நீண்ட நாட்களாக எதிர் பார்த்திருந்த வேலை அல்லது தொழில் புதிய ஒப்பந்தம் அனைத்தும் தெய்வ அனுகூலத்தாலும் அதிர்ஷ்டத்தாலும் சிறப்பாக நிறைவேறும்.

குருப்பெயர்ச்சி 2019 : குரு பார்வையால் கோடி அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
துலாம் – தைரிய குரு

வாழ்க்கை துணைவர் உடல் நலன் மற்றும் வளர்ச்சி நன்றாக இருக்கும்.சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு வாசல் தேடி வந்து சேரும். நீண்ட நாட்களாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தே தீரும். பணப்புழக்கம் மிகவும் எதிர் பாராத அளவுக்கு அதிகமாக இருக்கும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும். கணவன்-மனைவி பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேர்வர், நெடுநாள் வரை குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரர்கள் பிறப்பார்கள்.

விருச்சிகம் – குடும்ப தன குரு

இரண்டாம் இடத்தில் குரு. 6, 8, 10 இடத்திற்கு பார்வைகள். விருச்சிகத்திற்கு குரு ஒருவர் மட்டுமே நல்லவர் 12 ஆண்டுகள் கழித்து அந்த 2ம் வீட்டிற்கு வருகிறார். கஷ்டத்தை கொடுத்து வந்த ஏழரை சனியும் முடிகிறது. கேட்கவும் வேண்டுமா. தன்னால் என்னவெல்லாம் நல்லது செய்ய முடியுமோ அனைத்து நல்லதையும் இந்த விருச்சிக ராசி லக்கினக் காரர்களுக்கு செய்து விட்டே செல்வார். உங்களுக்கு என்ன வெல்லாம் வேண்டுமோ அதை திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் வேண்டுவது அனைத்தும் தருவான். உங்கள் உத்யோக மாற்றம் நிச்சயம். உங்கள் அறிவுக்கு ஏற்ற அல்லது படிப்புக்கு ஏற்ற அல்லது அனுபவத்திற்கு ஏற்ற அல்லது திறமைக்கு ஏற்ற மாற்றம் நடந்தே தீரும். இப்போது விட்டால் இந்த நல்ல காலமும் நேரமும் மீண்டும் அமைய 12 வருடங்கள் ஆகிவிடும். விருச்சிகத்திற்கு மட்டும் குருவானவர் 5 மற்றும் 9ல் வந்தாலும் 2ம் இடத்தில் நல்லது செய்வது போல் எந்த வீட்டிலும் செய்ய மாட்டார். ஒரு நல்ல நிகழ்விற்கு கடன் கிடைக்கும். நமக்கு பிடிக்காதவர்கள், பிரிந்தவர்கள், எதிராளிகள் கூட மீண்டும் நட்பு பாராட்டி வந்து சேருவர். உடலுக்கும் உழைப்புக்கும் 50% சமமாக நேரம், காலம், முக்கியத்துவம், கண்காணிப்பு அதை கொடுத்தே ஆகவேண்டும். ஏன் எனில் இந்த 1 வருடத்தை வீண் ஆக்க கூடாது. அதற்கு உடலும் உதவ வேண்டும். தொழில், உத்யோகம், வெளி நாடு சென்று வாணிபம், உயர் பதவி, விரும்பிய உணவு, அபரிதமான வருமானம், சாப்பிடக்கூட நேரம் இல்லாத நமக்கு பிடித்தமான உத்யோகம் அதனால் வரும் வருமானம் சந்தோஷம் அனைத்தும் அள்ளிக்கொண்டு வந்து சேரும்

சென்னை டூ யாழ்ப்பாணம் விமானசேவை தொடக்கம் : விரிவான தகவல்கள்

தனுசு – ஜென்ம குரு

ஜென்ம குரு 5 7 9 என்ற பரிபூரண அதி முக்கியமான இடங்களை பார்க்கிறார். அனைத்து சுப நிகழ்வுகள் திருமணம், குழந்தை பேறு, மூதாதையர் ஆசி, அரவணைப்பு, பரிபூரண தெய்வ அனுகூலம். தூர பிரயானம் அனைத்தும் மனதிற்கு ஏற்றபடி நடக்கும். நல்ல வாழ்க்கை துணை வருகை, நல்ல தொழில் பார்ட்னர் அமைதல், புதிய தொழில் ஒப்பந்தம் அனைத்தும் நன்றாக அமையும்.உங்கள் தந்தைக்கும், உங்கள் தந்தையால் உங்களுக்கும் சகலமும் சௌபாக்கியமே.

மகரம் – விரைய குரு

சுப விரையம், அதே நேரத்தில் வாழ்கையில் கிடைக்க வேண்டிய அத்துணை சுகங்களும் ஒருங்கே அனுபவிக்கும் காலம். புதிய வண்டி, புதிய வீடு, புதிய கல்வி, புதிய அனுபவம், புதிய உறவுகள் அனைத்தும் ஒருவருக்கு தன் தாயிடம் இருந்து கிடைக்கும் தூய அன்பு போன்ற சுகத்தையும் நிறைவையும் தரும். மற்றும் தாயின் அரவணைப்பும் நன்றாக இருக்கும். நேரிடையாக கல்யாணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு திருமணம் நடைபெறும். ஜென்ம குரு ஏழரை சனியின் தாக்கத்தை குறைத்தாலும் தினசரி பூஜையும் விஷ்ணு சஹஸ்ரநாமமும் அவசியமும் அதி முக்கியமும் கூட.

கும்பம் – லாப குரு

கும்பம் 2 க்கு உடைய குரு லாபஸ்தானத்தில் வருவது மிக மிக நல்லது. வீட்டில் வெகு நாட்களாக எல்லா வளங்களும் இருந்தும், அபரிதமான வருமானம் இருந்தும், நல்ல செல்வ வளமும் இருந்தும், வீட்டில் கல்யாணம் கூடிவராமல் இருக்கும் மகள் மகனுக்கு 100% கல்யாணம் ஆகிவிடும். உங்கள் அதி தீவிர முயற்சியும் கவனமும் இதில் இருக்கட்டும். அதேபோல தனக்கு குழந்தை இல்லையே என்றும், தனக்கு பிறந்த குழ்ந்தைக்கு ஒரு குழந்தை பிறக்க வில்லையே என்றும் காத்திருக்கும் அனைவருக்கும் அந்த முருகன் அருளாலும், உண்மையான ஷஷ்டி விரதத்தாலும் பிறக்கும். கல்யாண வயதில் மகள் மற்றும் மகன் இருந்து திருமணம் நடத்த காத்திருக்கும் பெற்றோருக்கும் சுப விரையம் மூலம் திருமணம் நடக்க ஜாக்பாட் தான் இந்த குரு பெயர்ச்சி.

ஏன் இந்த குரு பெயர்ச்சி கும்பத்திற்கு நல்லது என்றால் ஒரு பெற்றோருக்கு தன் வருமானம், தன் குழந்தைகளின் திருமணம், அவர்களின் குழந்தைபேறு மற்றும் தன் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு வீடு இவை அனைத்தும் இந்த குரு பெயர்ச்சியால் ஏற்படுத்தி தருவார்.

இலுமினாட்டிகள் என்பவர்கள் யார்? உலக விவகாரங்களை இலுமினாட்டிகள் கட்டுப்படுத்துவதாக கூறுவது உண்மையா? அவர்களின் வரலாறுதான் என்ன?

குருப்பெயர்ச்சி 2019 : குரு பார்வையால் கோடி அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது தெரியுமா?

மீனம் – தொழில் ஸ்தான குரு

வருமானம் மடை திறந்த வெள்ளம் போல் வந்து குவியும். சரியான வாய்க்கால் வடித்து அதை நல்ல முறையில் சேமிக்கா விட்டாலோ, இது தான் இனிமேல் நம் வாழ்க்கை பாதை என்று நினைத்து வந்த பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்தாலோ, உதாசீனப் படுத்தினாலோ, அல்லது அதற்கு மேலும் கடன் வாங்கி முதலீடு செய்து பெரும் பணம் பார்க்கலாம் என்று இறங்கினாலோ, அதள பாதாளம் காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். இது உங்களை பயமுறுத்த இல்லை. உங்களை நீங்கள் சரியான பாதையில் சென்று பாதுகாத்து கொள்ளவே சொல்கிறேன். அதே நேரத்தில் உங்களுக்கு மூதாதையர் ஆசி, அரவணைப்பு, தெய்வ கடாக்ஷம், குழந்தைகளின் வளர்ச்சி, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் படிப்பு திறன் அனைத்தும் உங்களை மகிழ்விக்கும். கேட்ட இடத்தில் எல்லாம் கடன் கிடைக்கும். நல்ல உத்தியோகம், இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு, உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் சீரடையும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: