செய்திகள்

பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு…! சற்று முன்னர் வெளியான செய்தி

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தக்கூடிய 80 நிறுவனங்கள் பதில் காவற்துறை மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் சகல மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட காவற்துறை மா அதிபர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த 80 நிறுவனங்களில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபணம், அதிகார சபை மற்றும் ஊடக நிறுவனங்களும் அடங்குகின்றன.

அவற்றில், ஜனாதிபதி செயலகம், பிரதமர் காரியாலயம், நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அமைச்சரவை காரியாலயம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், அரசியல் அமைப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழு, ஆயுர்வேத திணைக்களம், முதலீட்டு சபை, உணவு திணைக்களம், தொழில் திணைக்களம், மகளீர் மற்றும் சிறுவர் விவகார சமூக பாதுகாப்பு அமைச்சு, வளிமண்டலவியல் திணைக்களம், விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம், தீயணைப்பு சேவை திணைக்களம்,விமான நிலைய மற்றும் விமான சேவை திணைக்களம், விவசாய சேவை திணைக்களம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை, தேசிய நீர் வள அபிவிருத்தி சபை, தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை, மாவட்ட செயலகங்கள், தேசிய வருமான திணைக்களம், கடல் மற்றும் கடல்வள அபிவிருத்தி அமைச்சு, மாகாண ஆளுனர் செயலகங்கள், நுகர்வோர் அதிகார சபை, பிரதேச செயலக காரியாலயங்கள், நிதி அமைச்சு, அரச அச்சகம், அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம், பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுர்ராட்சி மன்ற அமைச்சு, இலங்கை மின்சார சபை, வன பாதுகாப்பு திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை முதலீட்டு சபை, பரீட்சைகள் திணைக்களம், ஸ்ரீ லங்கா வான் நிறுவனம், இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை அஞ்சல் திணைக்களம், நாடாளுமன்றம், இலங்கை தர நிர்ணய பணியகம், சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இலங்கை சுங்கம், சகல ஊடக நிறுவனங்கள், சகல தனியார் மருத்துவமனைகள், ஊடக சேவை நிறுவனங்கள், சுகாதார அமைச்சு, சகல அரச மற்றும் தனியார், வங்கிகள், மதுவரி திணைக்களம் உள்ளிட்ட 80 நிறுவனங்கள் அடங்குகின்றன.

எவ்வாறாயினும், இந்த அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி எவரேனும் தனிமைப்பட்ட பயணங்களை மேற்கொள்வாராயின், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் காவற்துறை மா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button