செய்திகள்

சீரற்ற வானிலையால் 1,156 குடும்பங்களைச் சேர்ந்த 4,126 பேர் பாதிப்பு ; மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் தொடர் மழைக்காரணமாக அத்தனகால ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அதவானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக இதன் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, மினுவாங்கொடை மற்றும் ஜாஎல ஆகிய பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இன்று நண்பகல் காலப் பகுதிகளில் நாடு முழுவதிலும் உள்ள 12 மாவட்டங்களில் தொடரும் மண்சரிவு, பலத்த மழை, வெள்ளப் பெருக்கு, மின்சார தடை உள்ளிட்ட அனர்த்தம் காரணமாக 1,156 குடும்பங்களைச் சேர்ந்த 4,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையால் 1,156 குடும்பங்களைச் சேர்ந்த 4,126 பேர் பாதிப்பு ; மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை! 1

அத்துடன் இதன் காரணாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்தும் 2 பேர் காணாமல் போயும் உள்ளனர். மேலும் 2 வீடுகள் முழுமையாகவும் 57 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதுடன், 158 குடும்பங்களைச் சேர்ந்த 569 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button