செய்திகள்

கொழும்பில் உலாவும் கடற்சிங்கம்: சுதந்திரமாக நடமாட இடமளிக்குமாறு கோரிக்கை

கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் கடந்த சில நாட்களாக கடற்சிங்கமொன்றை இடைக்கிடையே காணக்கூடியதாகவுள்ளது.

கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் குறித்த கடற்சிங்கத்தை இன்றைய தினமும் காணக்கிடைத்தது.

இரண்டு மணித்தியாலத்திற்கும் அதிகக் காலம் இந்த கடற்சிங்கத்தை குறித்த பகுதியில் காணக்கூடியதாக இருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

கடற்சிங்கத்திற்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் அதனை சுதந்திரமாக நடமாட இடமளிக்குமாறும் சமுத்திரவியலாளர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலையைப் பயன்படுத்தி அதனை பிடிக்க முற்பட்டாலும் சிகிச்சைகளை மேற்கொள்ள முற்பட்டாலும் அதற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Sources : Newsfirst.lk

Leave a Reply

Your email address will not be published.

Back to top button