செய்திகள்

கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த சிறப்பு சலுகை !

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலதனத்திற்காக மார்ச் 20 முதல் ஆறு மாத காலத்திற்கு கடன்கள் மற்றும் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கு அனுமதி வழங்க அமைச்சரவையின் ஒப்புதலுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தாங்கள் கையாளும் வங்கிகளிடமிருந்து 4 வீத வட்டிக்கு கடன் பெற மத்திய வங்கிக்கு அறிவுறுத்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள சுற்றுலா, ஆடைக் கைத்தொழில், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கான கடனை மீள செலுத்த 6 மாதங்கள் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி நாட்டு மக்களுக்காற்றிய உரையின் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் தெரிவித்தாவது,

நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்கு பாரிய பாரமாகக் காணப்படும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீளப் பெற்றுக்கொள்ளல் 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

அதேபோன்று வங்கியினால் வழங்கப்படும் பணி மூலதனம் 4% வட்டிக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் பங்கம் ஏற்படாதவாறு செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன் உங்களதும் எனதும் நாடு இன்று பாதுகாப்பானது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button