விளையாட்டு

ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்

முழங்கை கவசத்தை மாற்றுமாறு ஆலோசனை அளித்த ஹோட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன். அவரை சந்திக்க உதவுங்களேன் என இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்திஅசத்தி வருகிறார். பொங்கல் வாழ்த்து தொடங்கி அண்மையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் வரை அனைத்தையும் தமிழில் டுவீட் செய்திருந்தார். இவரது தமிழை படிப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அந்த வரிசையில் கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் தமிழில் டுவீட் செய்துள்ளார்.

ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட் 1

முழங்கை கவசம் அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் (Taj Coromandel) ஊழியர் ஒருவர் என்னுடைய  முழங்கை கவசம் (Elbow Guard) பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.

அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் ஆங்கிலத்திலும் டுவீட் போட்டுள்ள சச்சின் அதில் வீடியோவையும் இணைத்துள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button