செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரஃப் (76) மீதான தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராக பொறுப்பு வகித்த போது, அந்ந நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கினார்.

இதன் காரணமாக அவர் தேசத்துரோக குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கடந்த 2013ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அப்போதைய அரசு வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றில் நடைபெற்று வந்த மேற்படி வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 28ம் திகதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த தீர்ப்பை நிறுத்திவைக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றமும், லாகூர் உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டன.

பின் குறித்த வழக்கின் தீர்ப்பு 17ஆம் திகதி வெளியாகும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. அந்தவகையில் இந்த வழக்கில் முஷாரஃப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, இன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button