செய்திகள்

பெயர் மாறும் Caltex எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

ஆஸ்திரேலியாவிலுள்ள அனைத்து Caltex எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பெயர் மாற்றமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Caltex என்ற பெயரை தொடர்ந்தும் பயன்படுத்துவது தொடர்பில்,  Caltex Australia நிறுவனத்திற்கும் Chevron என்ற அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் முறிவடைந்ததையடுத்து ஆஸ்திரேலியாவின் அனைத்து Caltex எரிபொருள் நிரப்பு நிலையங்களும் Ampol என்ற பழைய பெயருக்கு மாறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 24 வருடங்களுக்கு முன்னர் Ampol என்ற பெயரில் Caltex எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆஸ்திரேலியாவில் இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தவருடம் மே மாதம் நடைபெறவுள்ள சந்திப்பில் இந்த பெயர் மாற்றம் குறித்து பேசப்படவுள்ளதாகவும் அதன் பின்னர், பங்குதாரர்களுக்கு இந்த மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர், புதிய பெயர் உட்பட அனைத்து விடயங்களும் தீர்மானிக்கப்படும் என்றும் Caltex தரப்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த முழுமையான மாற்றம் அடுத்த மூன்று வருடங்களில் நிறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1000 ஆண்டுகள் பழமையான மாயன் நாகரிக மாளிகை கண்டுபிடிப்பு

இலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..!

Sources : SBS Tamil

Leave a Reply

Your email address will not be published.

Back to top button