ஆன்மிகம்

2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்?… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?

2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்?… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?

பழைய ஆண்டு 2019 கடைசி நாட்கள் வந்து விட்டது புத்தாண்டு 2020 பிறக்கப் போகிறது. இந்த ஆண்டின் முதல் மாதத்தில் முதல் வாரம் இன்று தொடங்கியுள்ளது.

இந்த வாரம் முழுவதும் புதிய வருடத்தின் ஆரம்பம் யார் யாருக்கு அதிர்ஷ்டம். யாருக்கு நஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இதனை படிங்க.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களே புத்தாண்டை கொண்டாட தயாராகியிருப்பீர்கள். உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் சனி உள்ளிட்ட 5 கோள்கள் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கின்றன.

நீங்க நினைத்தது நடக்கும். பிசினஸ் ரீதியான பயணம் உங்களுக்கு மனதில் உற்சாகத்தை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கதவை தட்டும் அன்பான நபர்களை சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான வாரம் உங்களின் தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும்.

காதலிப்பவர்களுக்கு அன்பின் ஆழம் அதிகரிக்கும். உங்க அன்பானவருடன் நீங்கள் போகும் பயணம் சந்தோஷத்தை கொடுக்கும். பெண்களுக்கு இது சந்தோஷமான வாரம். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

 • அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
 • அதிர்ஷ்ட எண்: 15
 • அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை
ரிஷபம்

இந்த வாரம் உங்க நண்பர்களுடன் புத்தாண்டினை கொண்டாட தயாராகுங்கள். உங்களின் திட்டங்கள் வெற்றி பெறும். உங்களின் மனதிற்கு பிடித்த நபர்களுடன் நீங்க உங்களுக்கு பிடித்த உணவுகளைப் சாப்பிடுவீர்கள்.

இந்த வாரம் எதிர்பாராத சிறப்பு விருந்தினர்களின் சந்திப்புகள் நிகழும். உங்களின் சந்தோஷத்திற்கு நண்பர்கள் துணையிருப்பார்கள். இந்த வாரம் ராசிக்கு பத்தாம் வீட்டில் சந்திரனும், அஷ்டம ஸ்தானத்தில் ஐந்து கிரகங்களும் கூடியுள்ளன. எதையும் நிதானமாக யோசியுங்கள்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கவனமாக இருப்பது அவசியம் இல்லாவிட்டால் புத்தாண்டு சோகமாக முடிந்து விடும். எதையும் உணர்ச்சிப்பூர்வமாக யோசிக்காதீர்கள் கோபத்தை விட்டுத்தள்ளுங்கள் தன்மையாக பேசுங்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள்.

 • அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
 • அதிர்ஷ்ட எண்: 11
 • அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை
மிதுனம்

2020 புத்தாண்டு கொண்டாட்டம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். உங்கள் நண்பர்களின் பார்வை எல்லாம் உங்கள் மீதே இருக்கும். வீட்டில் உங்களை டென்சன்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறலாம் கவனம் தேவை. பணம் இந்த வாரம் தாராளமாக வரும் அதே போல செலவுகளும் கட்டுக்கடங்காமலேயே இருக்கும்.

பயணங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும். பண விவகாரங்களில் நீங்க கவனமாக இருங்க, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. கண் கோளாறுகள் வரலாம் மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.

வெளிநாடு பயணம் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் 2020ஆம் ஆண்டு அதற்கான பயணம் வெற்றிகரமாக முடியும். ஏதாவது ரகசியம் தெரிந்தாலும் நீங்க அதை வெளியில சொல்லாதீங்க ரொம்ப நல்லது. உங்க லட்சியத்தை நோக்கிய பயணம் தொடங்குகிறது. வாக்கு கொடுக்காதீங்க அதை காப்பாத்த முடியலையே என்ற பிரச்சினை ஏற்படும். ஏழாம் வீட்டில் புதன் குரு, சூரியன் இணைந்திருப்பது சந்தோஷம்.

 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
 • அதிர்ஷ்ட எண்: 30
 • அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை
கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு சூரியன் உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. பேச்சில் கவனமாக இருங்க. பணம் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் இந்த வாரம் ரொம்ப சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். குடும்ப வாழ்க்கையில அமைதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்க கல்யாண வாழ்க்கையில சந்தோஷத்தை அனுபவிப்பீங்க.

உங்க வாழ்க்கை அல்லது காதல் துணையை ரொம்ப சாப்ட் ஆக ஹேண்டில் பண்ணுங்க. நண்பர்கள், உறவினர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க.

ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் பிள்ளைகள் மீதான கோபத்தை கட்டுப்படுத்துங்க. உங்க லட்சிய கனவுகளை நோக்கி பயணப்படுங்க. இந்த வாரம் உங்க சந்தோஷம் அதிகரிக்க நீங்க எதிரிகள் மேல கவனமாக இருங்க முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுங்க. வீட்ல சுப செலவு நடக்கும். யார் கிட்டையும் ஏமாந்து போயிராதீங்க. வார துவக்கத்தில கவனமாக இருங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
 • அதிர்ஷ்ட எண்: 9
 • அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்தாண்டு பிறக்கப் போகிறது. உங்க முன்னேற்றத்தை நோக்கி பயணப்படப்போறீங்க. சொத்துக்கள் வாங்கலாம். வீட்ல இருந்த பிரச்சிரனைகள் தீரும் பணத்தேவைகள் தீரும்.

எந்த பிரச்சினையையும் நீங்களே சமாளிங்க அடுத்தவங்களை நம்பாதீங்க. இந்த வாரம் உங்களுக்கு சிக்கல்கள் தீரும் சந்தோஷம் அதிகரிக்கும் கணவன் மனைவி பிரச்சினைகள் வந்து போகும்.

பணம், நகைகளை பத்திரமாக வச்சிக்கங்க. வேலைக்கு போறவங்க கவனமாக பண்ணுங்க. செய்யிற வேலையை அப்பப்ப கவனமாக முடிங்க. இந்த வாரம் கல்யாண பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

 • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
 • அதிர்ஷ்ட எண்: 36
 • அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை
கன்னி

இந்த வாரம் உங்களுக்கு தைரியமான வாரம், சிக்கல்கள் எல்லாம் தீரும் எதிரிகளை வீழ்த்தலாம். செவ்வாயினால் நன்மைகள் அதிகமாகும். உங்க துணிச்சலுக்கு பலன் கிடைக்கும் வாய்ப்புகள் வெற்றிகரமாக முடியும்.

பெண்களுக்கு இது சந்தோஷமான வாரம் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகமாகும். குழப்பங்கள் நீங்கும் போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அது தீரும் வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. உங்க ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. திடீர் திருமண யோகம் வரும். வெளியூர் பயணங்கள் வரும் கவனம் தேவை. வியாபாராத்தில அதிக லாபம் வரும் முதலீடுகளை அதிகமாக செய்யாதீங்க. இருக்கிற தொழிலை சிறப்பாக பண்ணுங்க.

 • அதிர்ஷ்ட நிறம் : டார்க் ப்ளூ
 • அதிர்ஷ்ட எண்: 45
 • அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை
துலாம்

இந்த வாரம் நீங்க ஒரு முக்கியமான நபரை சந்திப்பீங்க அது உங்க வாழ்க்கை பயணத்தை மாற்றக்கூடியதாக இருக்கும் பிறக்கப்போகிற புத்தாண்டு உங்களுக்கு நல்ல தொடக்கத்தை தரப்போகிறது. சனியோட கேது இருப்பதால வீட்ல வயதானவங்கள் உடம்புல அக்கறை காட்டுங்க. பணப்பிரச்சனை நீங்கும்.

சொந்தக்காரங்க கிட்ட கோபமாக பேசாதீங்க. அரசியல்வாதிகள் கவனமாக இருங்க அவசரப்படாதீங்க. பல பிரச்சினைகள் நீங்கும். சொந்தக்காரங்களோட பயணம் செய்வீங்க. புத்தாண்டு கொண்டாட்டங்கள் சந்தோஷமாக முடியும். உங்க லட்சிய பயணம் ஆரம்பமாகிறது.

 • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
 • அதிர்ஷ்ட எண் 8
 • அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை
விருச்சிகம்

இந்த வாரம் கிரகங்கள் உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கு. புதன் சூரியன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில இருப்பதால பண வரவு அதிகமாக கிடைக்கும். இந்த வாரம் உங்க வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுக்கிரனால் உங்களோட உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.

உங்க வாழ்க்கைத்துணையோட ஆரோக்கியத்தில கவனமாக இருங்க மனைவியோட பாசமாக இருங்க. சந்தோஷமாக நீங்க பயணங்கள் போகலாம் நல்ல சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும். பேச்சில நிதானமாக இருங்க கோபம் வேண்டாம் காரணம் சூரியன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். உங்களுக்கு நல்லது நடப்பதற்கான காலம் வந்து விட்டது.

 • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
 • அதிர்ஷ்ட எண்: 3
 • அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை
தனுசு

பிறக்கப்போகிற புத்தாண்டின் முதல்வாரம் நல்ல தொடக்கமாக அமைய நீங்க கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருங்க. உங்க வேலையில கவனமாக இருங்க எந்த வேலையும் பெண்டிங் வைக்காதீங்க. அப்புறம் அதுவே சிக்கலாகும். உங்க ராசியில் இருக்கிற குரு ஏழாம் வீட்ல இருக்கிற ராகுவை பார்க்கிறார். பண வருமானம் அதிகமாக இருக்கும் சிக்கல்கள் நீங்கும். மனக்குழப்பம் தீரும். சனியால் அதிர்ஷ்டம். சொத்து வாங்க முயற்சி பண்ணலாம். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புத்தாண்டு மலர்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

 • அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
 • அதிர்ஷ்ட எண்: 22
 • அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை
மகரம்

சந்திரன் இந்த வாரம் சந்தோஷத்தை தரப்போகிறார். உங்களுக்கு பணம் பல வகையில வரும். அதே வேகத்தில் செலவுகளும் அதிகமாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த புத்தாண்டை நீங்க கொண்டாடப்போறீங்க. உங்க சந்தோஷம் அதிகமாக இருக்கும்.

உங்க உடல் நலத்தில அக்கறை காட்டுங்க. பிரச்சினை தீரும். உங்க முக்கிய முடிவுகள் சந்தோஷமாக இருக்கும். சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்டும் வேலைக்காக முக்கிய முடிவுகளை எடுங்க. உங்களுக்கு பதவிகள் தேடி வரும் அதிகமாக அகலக்கால் வைக்காதீங்க. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

 • அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
 • அதிர்ஷ்ட எண்: 17
 • அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை
கும்பம்

லாபமான வாரம் இது உங்களுக்கு நிறைய பணம் வந்து பாக்கெட் நிரம்பும். உங்க குடும்பத்தில சந்தோஷமான காரியங்கள் அதிகமாக நடக்கும். பதவிகள் கிடைக்கும். பேசும் போது நிதானமாக பேசுங்க முன்னெச்சரிக்கையா இருங்க. நீங்க எடுக்கிற முயற்சியில வெற்றி கிடைக்கும். சொந்த நிலம் வாங்கும் யோகம் அமையுது. கார், பைக் வாங்க முயற்சி பண்ணலாம். உங்க லட்சிய பயணம் இந்த ஆண்டு வெற்றிகரமாக தொடங்குது. திடீத் திருமண யோகம் அமையும். பழைய கடன்கள் நீங்கும். புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாடுங்க. மகிழ்ச்சியான வாரம் இது.

 • அதிர்ஷ்ட நிறம் : பீச்
 • அதிர்ஷ்ட எண்: 7
 • அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை
மீனம்

2020ஆம் ஆண்டின் முதல் வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக அமையப்போகிறது. மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடி வரும். காதல் நிறைந்த வாரம் இது. ரொமான்ஸ் அதிகரிக்கும். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில கிரகங்கள் இருப்பதால் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் தொழிலில் லாபம் அதிகம் வரும். பெண்களுக்கு நல்ல வாரம் திருமணம் நடைபெறும் கடன் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். நினைத்த காரியம் கைகூடி வரும். புத்தாண்டினை புது மலர்ச்யோ

 • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
 • அதிர்ஷ்ட எண்: 28
 • அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

முதலாம் திகதி முதல் பஸ்ஸில் பயணிப்பவர்கள் தொந்தரவின்றி பயணிக்கலாம்!!

How to Optimize Your Content for Search – SEO

Sources: Manithan.com

Leave a Reply

Your email address will not be published.

Back to top button