செய்திகள்

அமேசான் காட்டில் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த காட்சி, மூன்று வருடங்களின் பின் வெளிவந்த உண்மை!!

Thank you : IBC Tamil

தென்னமரிக்க கண்டத்தின் அமேசான் மழைக்காட்டில் முதன்முறையாக இராட்சத சிலந்தி ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

குறித்த சிலந்தி அமேசான் மழைக்காட்டில் வாழும் சுண்டெலி இனத்தைச் சேர்ந்த opossum எனும் பிராணியை வேட்டையாடும் காட்சி ஆராய்ச்சியாளர்களால் படம்பிடிக்கப்பட்டது.

அமேசான் காட்டில் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த காட்சி, மூன்று வருடங்களின் பின் வெளிவந்த உண்மை!! 1

இதுபற்றிய செய்தி கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் நாள் ஈரூடக மற்றும் ஊர்வன பாதுகாப்பு (Amphibian & Reptile Conservation) எனும் இதழில் Rudolf von May என்பவரால் எழுதப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பெருவியன் பகுதியிலுள்ள அமேசான் காட்டில் நடந்த இந்த சம்பவம் தற்பொழுதே உலகுக்கு வெளிவந்துள்ளது.

அமேசான் காட்டிற்குச் சென்ற மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பிரிவின் மாணவர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு தவளைகள், பல்லிகள் மற்றும் பாம்புகள் போன்றவற்றை உண்ணும் சிலந்திகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டபோதே முதன்முறையாக இந்த அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்டனர்.

அமேசான் காட்டில் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த காட்சி, மூன்று வருடங்களின் பின் வெளிவந்த உண்மை!! 2

முதுகெலும்புள்ள பிராணிகளை பிடித்து உண்ணும் சிலந்திகள் பற்றி ஹோலிவூட் திரைப்படங்களில் மட்டுமே கற்பனையாக கண்டுவந்த காட்சி நேரடியாக பதியப்பட்டது.

ஒரு இராட்சத சிலந்தி நன்கு வளர்ந்த அந்த ஒப்போசம் எலியினை கெட்டியாகப் பற்றி நிலைதடுமாறவைத்து உணவுக்காக இழுத்துச் செல்கிறது.

இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காகச் சென்ற மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவு மாணவரான Grundler என்பவர் கூறுகையில்,

“நாங்கள் அந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். ஒரு ஒப்போசம் பிராணியின்மேலே அந்த இராட்சத சிலந்தி நிற்பதைக் கண்டோம். ஏற்கனவே அந்த சிலந்தி ஒப்போசத்தைப் பிடித்துவிட்டது. ஆனால் அதிலிருந்து மீள்வதற்கு ஒப்போசம் போராடியது. அது நன்றாகவே பலவீனப்பட்டுவிட்டது. முப்பது விநாடிகள் நடந்த இந்த போராட்டத்தின் இறுதியாக அந்த ஒப்போசத்தை வலிமையாக உதைத்து நிறுத்தியது சிலந்தி.” என்றார்.

மேலும் குறித்த சிலந்தி இரவுச் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் தட்டு அளவுக்கு இருந்ததாகவும் அந்த ஒப்போசம் ஒரு மென்பந்து அளவுக்கு இருந்ததாகவும் விபரிக்கின்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அந்த இடத்தில் எதைப் பார்த்தோம் என்பதை எம்மால் நம்பமுடியவில்லை. அமேசான் காட்டில் பல அற்புதங்கள் நிறைந்திருக்கும் என்பதை அறிந்திருந்தோம். ஆனால் இதுவரைக்கும் இதுபோன்ற ஒரு காட்சியைக் கண்டதில்லை.” என்கிறார்.

நன்றி காணொளி: Rhett Butler (YouTube)

அமெரிக்க வரலாற்றில் இந்த சம்பவம் முதன்முதலாக நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த செய்தியைக் கொண்டுவந்த அந்த இதழின் கட்டுரையில் சிறிய தவளைகள், பல்லிகள் மற்றும் சிறிய பாம்புகள் உள்ளிட்ட விலங்குகளை உண்ணும் சிலந்திகள்குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

அமேசான் காட்டில் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த காட்சி, மூன்று வருடங்களின் பின் வெளிவந்த உண்மை!! 3

அமேசான் காட்டில் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த காட்சி, மூன்று வருடங்களின் பின் வெளிவந்த உண்மை!! 4

அமேசான் காட்டில் விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்த காட்சி, மூன்று வருடங்களின் பின் வெளிவந்த உண்மை!! 5

Back to top button