செய்திகள்

மாகந்துரே மதுஷ் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

Source : newsfirst

துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்‌ஷித இன்று (5ஆம் திகதி) அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மாகந்துரே மதுஷை குற்றப்புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தென் மாகாண முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டியவை கொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ், போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத்தவிர, பாதாள குழுத்தலைவரான சமயங் பயணித்த சிறைச்சாலை பஸ் மீதும் துப்பாக்கிப் பிர​யோகம் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டும் மாகந்துரே மதுஷ் மீது சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு குற்றச்சாட்டாகும்.

இவ்வாறான பின்புலத்தில் நாட்டிலிருந்து தப்பிச்சென்று துபாயில் வாழ்ந்த மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினர், கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி போதைப்பொருளுடன் ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டனர்.

துபாயிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற தமது பிள்ளையின் பிறந்தநாள் விழாவின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்ட 30 பேர் ஏற்கனவே நாட்டிற்கு திருப்பியனுப்பட்டனர்.

மாகந்துரே மதுஷ் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். 1

இவர்களில் மாகந்துரே மதுஷின் உதவியாளரான கஞ்சிப்பானை இம்ரான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, ​ேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

துபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ், இலங்கையில் தமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக அந்நாட்டின் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

எவ்வாறாயினும், மாகந்துரே மதுஷை நாடு கடத்துமாறு இலங்கை அரசின் சார்பில் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அந்நாட்டு அதிகாரிகளை வலியுறுத்தியிருந்தார்.

Back to top button