Be where the world is going

குருவின் பார்வை.. இன்றிலிருந்து உச்சத்தில் இருக்கும் அதிர்ஷ்ட ராசிக்காரர் யார்?.. எந்தெந்த ராசிக்கு நற்பலன்கள் கிடைக்கும்..!

0 36

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
குருவின் பார்வையிலிருந்து எந்தெந்த ராசிக்காரர் அதிர்ஷ்டத்தையும், பலனையும் அடைவார்கள் என்றும் பார்க்கலாம்.
மேஷம்
தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
ரிஷபம்
எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையால் அசதி ஏற்படக்கூடும்.
வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். ஆனால், சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.
கடகம்
உற்சாகமான நாள் தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.
வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பாக்கித் தொகைக்காக வாடிக்கையாளருடன் சிறு சச்சரவு ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
சிம்மம்
உற்சாகமான நாள் சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வார்.
அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.
அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
துலாம்
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.
வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
விருச்சிகம்
புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும்.
வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
தனுசு
அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
மகரம்
புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.
கும்பம்
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்
காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
வியாபாரத்தில் சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் 🙂

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More