ஆன்மிகம்

இன்றைய நாள் – (16.08.2019) ஸ்ரீவிகாரிவருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

துன்பங்ளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16.08.2019)…!

16.08.2019 ஸ்ரீவிகாரிவருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

கிருஷ்ணபட்ச பிரதமை திதி முன்னிரவு 8.10 வரை. அதன் மேல் துவிதியை திதி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.40 வரை. பின்னர் சதயம் நட்சத்திரம். சிரார்த்த திதி  தேய்பிறை பிரதமை. சித்த யோகம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூசம் ஆயில்யம். சுப நேரங்கள் காலை 09.15 – 10.15  மாலை 04.45 – 05.45 ராகுகாலம் 10.30 – 12.00 எமகண்டம் 3.00 – 4.30  குளிகை காலம் 7.30 – 9.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம், சிராவண பகுள பிரதமை, காயத்ரி ஜெபம்.

மேடம் : நலம், ஆரோக்கியம்

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : அன்பு, ஆசை

கடகம் : வாழ்வு, வளம்

சிம்மம் : பணம், பரிசு

கன்னி : செலவு, விரயம்

 

துலாம் : நன்மை, யோகம்

விருச்­சிகம் : ஆர்வம், திறமை

தனுசு : தெளிவு, அமைதி

மகரம் : பரிவு, பாசம்

கும்பம் : முயற்சி, முன்னேற்றம்

மீனம் : பரிவு, பாசம்

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி (23.08.2019) வெள்ளிக்கிழமை. திரு அவதார மகிமை “மடந்தாழு நெஞ்சத்குக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை தூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே! நாராயணா என்னா நாவென்ன நாவே”–சிலப்பதிகாரம். கண்ணனாக அவதரித்த நாராயணனை போற்றாத நா பயன்பெறுமா?

கேது, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள் – 5, 6

பொருந்தா எண்கள் – 7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள் – நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

Back to top button