செய்திகள்

180 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது..

180 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன..

உக்ரைன் போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 180 பேர் பயணம் செய்துள்ளனர்

உக்ரைன் சர்வதேச விமானசேவையை சேர்ந்த இந்த விமானம், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமெனி விமானநிலையத்தில் இருந்து கிளம்பி சென்ற உடனே இந்த விபத்து நடந்துள்ளதாக ஃபார்ஸ் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகரான கீவ்-விற்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பெரிதாகியுள்ள இரான் – அமெரிக்கா இடையேயான மோதலுக்கு இந்த விபத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை.

இந்தோனீஷியா: வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சி

2020ல் ஆட்டிப்படைக்க போகும் சனி, ராகு, கேது பெயர்ச்சி! ஏழரை சனி முடிந்து ஜென்ம சனி ஆரம்பம்! இந்த 4 ராசியில் யாருக்கு ராஜயோகம்?

புத்தாண்டிலிருந்து அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம்..!

Sources : – BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button