ஆன்மிகம்

மார்ச் மாத இறுதியில் உச்சம் கொடுக்கும் உக்கிர சனி! யாரை ஆட்டிப்படைக்க காத்திருக்கிறார் தெரியுமா? விபரீத ராஜயோகம் இந்த ராசிக்கு தான்

மார்ச் மாதம் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது.

மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர நிலையில் இருக்கிறார்.

இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். கிரகங்கள் இந்த மாதம் ராசி மாற்றம் அடைகின்றன.

மார்ச் 10ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் சஞ்சரிக்கிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் குரு உடன் இருக்கும் செவ்வாய் 22ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்று சனியோடு இணைகிறார்.

குரு மாத இறுதியில் அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசியில் செவ்வாய், சனியோடு இணைகின்றார். மாத இறுதியில் 28ஆம் தேதி சுக்கிரன் ரிஷபம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

சூரியன் இடப்பெயர்ச்சி, செவ்வாய், சனி சேர்க்கை கிரகங்களின் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சிலருக்கு பாதிப்பும் ஏற்படும்.

குருவின் அதிசார சஞ்சாரமும் சில ராசிக்காரர்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும். மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, நீங்க ரொம்ப சுறுசுறுப்பானவர்கள். உங்களுக்கு சூரியன் 11ஆம் வீட்டில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மாத முற்பகுதியில் அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

புதன் எந்த பிரச்சினையும் தரமாட்டார். ராசியில் உள்ள சுக்கிரனால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். குரு உங்க ராசியை பார்க்கிறார். சுக்கிரன் உங்க ராசியில் அமர்ந்திருக்கிறார்.இதனால் நன்மைகள் அதிகம் நடக்கும்.

பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயினால் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசிக்கு வருகிறார். பத்தாம் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார்.

மாத பிற்பகுதியில் செவ்வாயுடன் சனி இணையப்போகிறார். சகோதரர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் மாற்றம் ஏற்படும். கர்ம ஸ்தானம் பத்தாம் இடம். பத்தாம் வீட்டில் கிரகங்கள் இணைவதால் மாற்றங்கள் ஏற்படும். புது புது ஐடியாக்கள் வரலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லது நிறைய நடக்கும். சுக்கிரன் சுகத்தை தரப்போகிறார். 12ஆம் வீட்டிற்கு சுக்கிரன் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு பயணம் ஏற்படும்.

சந்தோஷம் அதிகம் நடக்கும். விரைய செலவுகள் சுப செலவுகளாக ஏற்படும். சூரியன் பத்தாம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு நான்காம் வீட்டினை பார்க்கிறார். சுப செலவுகள் ஏற்படும்.

வண்டி வாகன யோகம் வரும். சனி உங்களுக்கு பாக்ய சனியாக இருப்பதால் நிறைய பாக்யங்களை தருவார். செலவு அதிகமானலும் வருமானமும் அதிகமாக வரும். சந்தோஷமான மாதம்.

எட்டாம் வீட்டில் உள்ள செவ்வாய் 22ஆம் தேதி மகரம் ராசியில் உள்ள சனியோடு இணைகிறார். ராஜயோக அமைப்பு. இந்த கிரக சஞ்சாரம் வேலையிலும், வியாபாரத்திலும் நல்ல லாபத்தை கொடுக்கும்.

மாத இறுதியில் குரு பகவான் சனி செவ்வாயுடன் இணைவது சிறப்பம்சம். கிரகங்களின் கூட்டணி சிறப்பாக நடைபெறும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பெண்களுக்கு அற்புதமான யோகம்.

14ஆம் தேதி சூரியன் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். எட்டாம் வீட்டில் இருந்த குருவும், செவ்வாயும் மாத பிற்பகுதியில் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு வருவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். கடன்கள் தீரும். பொருளாதார ரீதியாக நிறைய உயர்வுகள் வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் நோய்கள் தீரும்.

உங்க ராசிநாதன் சுக்கிரன் 28ஆம் தேதி உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். பொருளாதார ரீதியாக ரொம்ப நல்ல மாதம். உங்களுக்கு முகத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து முகம் பொலிவாகும் அழகாக மிளிரும்.

மாத இறுதியில் சுக்கிரன் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் மாளவியா யோகம் கிடைக்கிறது. கிரகங்களின் சஞ்சாரத்தினால் நிறைய யோகங்கள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கல்யாண யோகம் வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் ரிஷப ராசி தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். உங்களின் ஆசைகள் நிறைவேறப்போகிறது.

மிதுனம்

உங்க ராசிநாதன் புதன் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். 10ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார் குழப்பங்கள் தீரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

அடிப்படையான வசதிகள் கிடைக்கும். புதன் சூரியனோடு சஞ்சரிக்கும் காலத்தில் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மாணவர்களுக்கு நல்ல நிலையை தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

திருமண பேச்சுவார்த்தையை தவிர்த்து விடுங்கள். பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வீண் வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள். பணம் விசயங்களில் கவனமாக இருங்க யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க கடன் வாங்கி கொடுக்காதீங்க.

மாத பிற்பகுதியில் 10ஆம் வீட்டில் சூரியன் நகரும் போது பதவி உயர்வை தரும். புதிய வேலைகள் கிடைக்கும். மாத இறுதியில் சனி செவ்வாய் குரு இணையப்போகின்றன.

எட்டாம் வீட்டில் சனி, செவ்வாய் சேர்க்கை நிறைய பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கை தேவை. 12ல் சுக்கிரன் எட்டில் செவ்வாய், சனி, குரு என சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

தொழில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே புதிய முயற்சிகள் முதலீடுகளை செய்யுங்கள். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் நன்மைகள் நடக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published.

Back to top button