செய்திகள்

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை! யாழில் சம்பவம்

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம், கரவெட்டி, சாமியன் அரசடிப் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தமது உறவினரின் வீட்டில் தங்கியுள்ளனர். வீட்டிலுள்ள அனைவரும் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் பிற்பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் உள்ள பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன. வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த 20 பவுண் தங்க நகைகள், 400 ஸ்ரேலிங் பவுண்ட் நாணயத் தாள்கள், ஆயிரத்து 300 யூரோ நாணயத்தாள்கள் என்பன திருட்டுப் போயுள்ளன.

சம்பவம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button