Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.02.2020 )..!

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

23.02.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் ஞாயிற்றுக்கிழமை
திதி அஷ்டமி இரவு 8.50 வரை பிறகு நவமி
நட்சத்திரம் விசாகம் காலை 10.36 வரை பிறகு அனுஷம்
யோகம் மரணயோகம்
ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம் பகல் 12.00 முதல் 1.30 வரை
நல்லநேரம் காலை 6 முதல் 7 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம் ரேவதி காலை 10.36 வரை பிறகு அசுவினி
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

 

மேஷராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

ரிஷபராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும், விரைவில் சரியாகிவிடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். சிலருக்குக் குடும்பத்துடன் கோயி லுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கக்கூடும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

கடகராசி அன்பர்களே!

இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களால் செலவுகள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்

சிம்மராசி அன்பர்களே!

வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகை ஆதாயம் தரும். பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவி செய்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த் ததை விடவும் லாபம் அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லை களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.

துலாராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு பிள்ளைகள் வழி யில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

தனுசுராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர் களை அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வாங்கிய கடனைத் திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

மகரராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் எதிர்பாராத நல்ல திருப் பம் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலய வழிபாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பக லுக்குமேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் உடல் அசதி ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

 

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept