செய்திகள்

“மக்களுக்கோர் மகிழ்ச்சிகர செய்தி“: வெளி­நாட்டில் பணி­பு­ரி­வோ­ருக்கு ஓய்­வூ­தியம் வழங்கத் தீர்­மானம்

நாட்­டுக்கு அந்­நிய செலா­வ­ணியை ஈட்­டித்­த­ரு­வதில் வெளி­நா­டு­களில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் பெரும் பங்கு வகிக்­கின்­றனர். எனினும் அவர்­களில் தங்­கி­யுள்­ளோரின் சமூக பாது­காப்­புக்­கான தொகையை சேமிக்க  முடி­யா­துள்­ளதால் அவர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

ஒரு மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட இலங்­கை­யர்கள் வெளி­நா­டு­களில் தொழில் வாய்ப்­புக்­களில் ஈடு­பட்­டுள்­ளனர். தற்­போது அந்­நிய செலா­வ­ணியைப் பெற்­றுத்­தரும் முக்­கிய மூல வள­மாக வெளி­நாட்டு பணி­யா­ளர்கள் திகழ்­கின்­றனர்.

அவ்­வாறு இருந்த போதிலும் வெளி­நாட்டு பணி­யா­ளர்கள் மற்றும் அவர்­களில் தங்­கி­யுள்­ளோரின் சமூக பாது­காப்­புக்­காக ஏதேனும் தொகையை சேமிப்­ப­தற்கு முடி­யா­துள்­ளது. இதன் கார­ண­மாக அவர்­க­ளுக்கு ஓய்­வூ­திய வயதை எட்­டிய பின்னர் பொரு­ளா­தார சிர­மங்­களை எதிர்­கொள்­வது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்குத் தீர்­வாக   ‘சௌபாக்­கிய தொலை­நோக்கு’ என்ற தேசிய கொள்­கையின் மூலம் வெளி­நா­டு­களில் உள்ள பணியாளர்களுக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஓய்வூதிய கொடுப்பனவு முறையை ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Back to top button