Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.03.2020 )..!

"தன் குற்றங்களை ஏற்றுக்கொண்டு அதனை மாற்றிக் கொள்பவனால் மட்டுமே முன்னேற முடியும்..!"

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

07.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 24 ஆம் நாள் சனிக்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் சனிக்கிழமை
திதி திரயோதசி
நட்சத்திரம் ஆயில்யம்
யோகம் மரணயோகம்
ராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை
நல்லநேரம் காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம் பூராடம்
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்

 

மேஷராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு. திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் உற்சாகமாகப் பணி செய்வார்கள்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரிஷபராசி அன்பர்களே!

அதிகாரிகளின் சந்திப்பும், அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும் என்றாலும் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுனராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணியின் காரணமாக வெளியில் செல்ல வேண்டி வரும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எதிர் பார்த்ததைவிடவும் விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஏற்பட்ட அபவாதம் நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்

சிம்மராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்க வும் நேரிடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அலுவலகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னிராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.

துலாராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணை யுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்படக்கூடும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் பிற்பகலுக்குமேல் ஈடுபடுவது நல்லது.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிகராசி அன்பர்களே!

இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்னை ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமை சற்று சோர்வை ஏற்படுத்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சிறு தடை ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்

மகரராசி அன்பர்களே!

தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். மற்றபடி வீட்டில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சமாளித்து விற்பனையை அதிகரிப்பீர்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மீனராசி அன்பர்களே!

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளை யோசித்து எடுப்பது நல்லது. கடன்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பிற்பகலுக்குமேல் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும்..

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு, தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: டெல்லியில் இரு பள்ளிகள் மூடல் – கடற்படை நிகழ்வு ரத்து

ஏழரை சனி முடிய கண்டச்சனி, அஷ்டம சனி என அடுத்தடுத்து வருடக்கணக்கில் ஆட்டி படைக்க போகும் 2020 இன் சனி பெயர்ச்சி! யாருக்கெல்லாம் ஆபத்து?

தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் பணி நிறுத்தம்: தாகத்தில் தவிக்கப் போகிறதா சென்னை? – கள நிலவரம்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: