Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

Daily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.03.2020 )..!

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

13.03.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (Daily Horoscope For All Signs)

பஞ்சாங்கம்

நாள் வெள்ளிக்கிழமை
திதி சதுர்த்தி பகல் 2.45 வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் சுவாதி இரவு 7.42 வரை பிறகு விசாகம்
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி இரவு 7.42 வரை பிறகு ரேவதி
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

Ad_sayam_ banner_en

மேஷராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் அதிகரிக்கும். இன்று காலை துர்கையை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடப் பெறலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும்

ரிஷபராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இன்றைய நாளை விநாயகப் பெருமானை வழிபட்டுத் தொடங்க, காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

மிதுனராசி அன்பர்களே!

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர் பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு மகான்களை தரிசிக்கவும் அவர்களுடைய ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவி யுடன் சமாளித்துவிடுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மகான் ஶ்ரீராகவேந்திரரை வழிபடுவதன் நன்மைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

கடகராசி அன்பர்களே!

தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்டநாள்களாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று வேங்கடேச பெருமாளை தியானித்து வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணத்தால் உடல் அசதி ஏற்படக்கூடும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

Ad_sayam_ banner_en

சிம்மராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். தந்தை வழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுத லாக இருக்கும். ஆனாலும், பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று சூரியபகவானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்

கன்னிராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். குடும்பப் பொறுப்புகளை நிறை வேற்றுவதில் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பகூடும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட முயற்சிகள் பலிதமாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களால் திடீர் செலவுகளும் ஏற்படும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இன்னல்களைப் போக்கிக் கொள்ளலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும்.

விருச்சிகராசி அன்பர்களே!

அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். கூடுமானவரை அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். இன்று முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைச் சமாளித்துவிடலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

Ad_sayam_ banner_en

தனுசுராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவ லகப் பணியின் காரணமாகப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். இன்று மகாலட்சுமியை வணங்குவது எதிர்பாராத பணலாபத்தைத் தரும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படும்.

மகரராசி அன்பர்களே!

அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் அல்லல்களைப் போக்கிக்கொள்ளலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்களைச் சந்திக்கவும், அவர்கள் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் நன்மையே உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இன்று விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவும், அதன் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மீனராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். சகோதர வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைப் போக்கிக்கொள்ளலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி? – Coronavirus: Safety and Readiness Tips for You

கொரோனா தொற்று: பாடசாலைகளுக்கு விடுமுறை, விசேட இயந்திரம் கையளிப்பு; தயாராகும் இலங்கை – கள நிலவரம்

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept

%d bloggers like this: